உதவாத உத்தவ் தாக்கரே -சரத் பவார் அணி.. மகாராஷ்டிராவில் காங்கிரஸ் தோற்றது ஏன்? பற்றவைத்த பரமேஸ்வர்
பெங்களூர்: மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் ஒருங்கிணைப்பு சரியில்லை. உத்தவ் தாக்கரே, சரத்பவார் அணிக்கும் நாங்களும், எங்களின் அணிக்கு உத்தவ் தாக்கரேவும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. ஒவ்வொரு கட்சியும் இன்னொரு கட்சிக்கு உதவி செய்யவில்லை. இதனால் தான் மகா விகாஷ் அகாடி தோற்றுள்ளது என்று கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக அன்றைய தினம் ஓட்டுப்பதிவு நடந்தது. இந்த ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

இதில் ஆளும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட்டணி தோல்வியை தழுவியது. மகாராஷ்டிராவில் 288 தொகுதி இருப்பதால் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க 145 இடங்களில் வெல்ல வேண்டும்.
இந்நிலையில்தான் பாஜக கூட்டணி மொத்தமாக 233 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் ஆளும் கூட்டணியில் பாஜக மட்டும் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. மேலும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றது.
மறுபுறம் எதிர்க்கட்சியான ‛மகா விகாஸ் அகாடி’ என்ற பெயரில் கூட்டணி அமைத்ததில் காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றது. மொத்தம் இந்த கூட்டணி 49 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
இதன்மூலம் மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி அமைகிறது. அடுத்த முதல்வராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், அம்மாநில உள்துறை அமைச்சரும், மகாராஷ்டிரா மாநில தேர்தல் பொறுப்பாளர்களில் ஒருவருமான பரமேஸ்வர் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
மகாராஷ்டிராவில் பல இடங்களில் நாங்கள் அவர்களுடன் (உத்தவ் அணி, சரத்பவார் அணி) சேர்ந்து பணியாற்றவில்லை. அதேபோல் பல இடங்களில் அவர்கள் எங்களுடன் சேர்ந்து செயல்படவில்லை. கூட்டணி என்று வரும்போது நாங்கள் சிவசேனா வேட்பாளருக்கும், சிவசேனா கூட்டணியில் உள்ள பிற கட்சி வேட்பாளர்களுக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. சரத்பவார் கட்சியை எடுத்து கொண்டாலும் இதுதான் நடந்தது.
இது நடந்து இருந்தால்விதர்பா பகுதியில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்று இருக்கும். அங்கு மொத்தம் 50க்கும் அதிகமான தொகுதிகளை எதிர்பார்த்தோம். ஆனால் 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம். மொத்தமாக போட்டியிட்ட 105 இடுங்களில் 60 முதல் 70 இடங்களில் வெல்வோம்என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் நினைத்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.
நம் நாட்டில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும் வரை, காங்கிரஸ் அல்லது வேறு எந்த கட்சியும் ஆட்சிக்கு வருவது மிகவும் கடினம். ஏனென்றால் அவர்கள் (பாஜக) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக்கிங் செய்வதில் வல்லுநர்கள்’’ என்று கூறியுள்ளார்.
-
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி












Click it and Unblock the Notifications