செக்யூரிட்டிகளை வைத்து ஊழியர்களை விரட்டிய இன்போசிஸ்.. ஊழியர்கள் புகார்.. சாட்டையை எடுத்த மத்திய அரசு
பெங்களூர்: மைசூர் வளாகத்தில் பணியாற்றிய 700 ஊழியர்களை இன்போசிஸ் நிறுவனம் சமீபத்தில் பணி நீக்கம் செய்திருந்தது. இது குறித்து புகார்கள் எழுந்த நிலையில், கர்நாடக அரசின் தொழிலாளர் நலத்துறை உடனடியாக தலையிட மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.
மத்திய அரசின் உத்தரவின் பேரில், கர்நாடக மாநில தொழில்துறை அதிகாரிகள் மைசூர் வளாகத்தில் திடீரென ரெய்டு மேற்கொண்டிருக்கின்றனர்.

பிரச்சனை என்ன?
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர், இன்போசிஸ் நிறுவனம் முன்னணி கல்வி நிறுவனங்களிலிருந்து கேம்பஸ் இன்டர்வியூ மூலம் ஆட்களை எடுத்திருந்தது. கேம்பஸ் இன்டர்வியூவில் செலக்ட் ஆவது அவ்வளவு சுலபம் கிடையாது. குறைந்தது 5 ரவுண்ட் இருக்கும். ஒவ்வொன்றிலும் தேர்வானால்தான் அடுத்த சுற்றுக்கு போக முடியும். இப்படி வடிக்கட்டிதான் ஆட்களை நிறுவனம் செலக்ட் செய்து வைத்திருந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக இவர்களுக்கு எந்த ஆஃபர் லெட்டரும் கொடுக்கப்படவில்லை.
தொடர்ந்து கேள்வி மேல் கேள்வி எழுந்த நிலையில், செலக்ட் ஆனவர்களுக்கு மாதம் ரூ.25,000 சம்பளம் தருகிறோம் என்று கூறி ஆஃபர் லெட்டரை கொடுத்தது. அனைவரையும் மைசூரில் உள்ள வளாகத்திற்கு வரவழைத்து டிரெய்னிங் கொடுத்தது. இதிலும் 3 ரவுண்ட் டெஸ்ட் இருக்கும். ஏதாவது ஒன்றில் பாஸ் ஆனால் போதும். ஆனால் 3 சுற்றுகளிலும் 700 பேர் பாஸ் ஆகவில்லை என்று கூறி அவர்களை நிறுவனத்திலிருந்து வெளியில் அனுப்பியது.
அதாவது நிறுவனத்தின் செக்யூரிட்டிகளை வைத்தும், பவுன்சர்களை வைத்தும் வலுக்கட்டாயமாக கழுத்தைப்பிடித்து ஊழியர்களை வெளியில் தள்ளியது.
இந்த சம்பவம்தான் ஊழியர்கள் மத்தியில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. நாங்க என்ன அடிமையாக வேலை செய்யவா வந்தோம்? நல்லா படிச்சு இன்டர்வியூல செலக்ட் ஆகிதானே இங்கே வந்திருக்கிறோம். இப்படி மனிதாபிமானமே இல்லாம் நடந்துக்கொண்டால் எங்கள் கல்விக்கு என்ன மரியாதை? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மறுபுறம் ஐடி துறை தொழிற்சங்கமான நேசன்ட் தகவல் தொழில்நுட்ப ஊழியர் செனட் (NITES), இந்த விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு புகார் அளித்திருந்தது. புகாரில், ஊழியர்களை கொத்தாக வேலையை விட்டு வெளியே அனுப்புவது, கண்ணிய குறைவாக நடத்துவது, 2 ஆண்டுகள் காக்கவைக்கப்பட்டு பயிற்சி அளித்தது உள்ளிட்டவற்றை விரிவாக கூறியிருந்தது.
புகாரை பரிசீலித்த மத்திய தொழிலாளர் நலத்துறை, கர்நாடக மாநிலத்தின் தொழிலாளர் நல ஆணையம் இது குறித்து விசாரித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.
ஒரு நாளைக்கு 10 மணி நேரம் என, வாரம் வீக் ஆஃப் கூட இல்லாமல், 70 மணி நேரம் எல்லோரும் வேலை செய்ய வேண்டும் என்று இன்போசிஸ் நாராயண மூர்த்தி சில நாட்களுக்கு முன்னர் பேசியிருந்தார். அவரது கருத்துக்கு பலரும் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்நிலையில் தொழிலாளர்களை வேலையை விட்டு தூக்கிய பஞ்சாயத்தில் இன்போசிஸ் நிறுவனம் சிக்கியிருப்பது, ஐடி துறையில் விவாதமாக மாறியிருக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications