ஆஹா இது லிஸ்டுலேயே இல்லையே! கர்நாடகாவிற்கு 3 துணை முதல்வர்கள்.. அடுத்த சிஎம் யார் தெரியுமா? ட்விஸ்ட்
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்றுள்ள நிலையில் முதல்வராக பதவி ஏற்க போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. கர்நாடகாவில் காங்கிரஸ் மாபெரும் வெற்றியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. 128 இடங்களில் வெற்றியை நோக்கி காங்கிரஸ் கட்சி சென்று கொண்டு இருக்கிறது
காலை 8 மணியில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் பாஜக 64 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 137 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மஜத மொத்தம் 21 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
கர்நாடகாவில் காங்கிரஸ் பெற கூடிய இந்த வெற்றி அந்த மாநிலத்தில் கடந்த 34 ஆண்டுகளில் ஒரு கட்சி பெற்ற மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.
1994 - 115, 33.54% (ஜேடிஎஸ், எச்டி தேவகவுடா)
1999 - 132, 40.84% (INC, SM கிருஷ்ணா)
2004 - 79, 28.33% (BJP, BSY)
2008 - 110, 33.86% (BJP, BSY)
2013 - 122, 36.6% (INC, சித்தராமையா)
2018 - 104, 36.3% (BJP, BSY)
முந்தைய சாதனை 1989 - 178, 43.76% (INC, வீரேந்திர பாட்டீல்)
கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை பறிகொடுத்துவிட்டது. தற்போதைய தேர்தல் ஆணைய முடிவுகளின் படி காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை விட கூடுதலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆகையால் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை அமைக்கிறது.
1 மாதமாக நடந்த பிரச்சாரம்.. காரசார விவாதம்.. அரசியல் மோதல்கள் எல்லாம் கர்நாடகாவில் முடிவிற்கு வந்துள்ளது. திருவிழாவிற்கு இணையாக கர்நாடகா சட்டசபை தேர்தல் நிறைவு பெற்றுள்ளது.

டிகே சிவக்குமார் : இந்த நிலையில் காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ள நிலையில் அங்கே யார் முதல்வர் என்ற சந்தேகமும் நிலவி வருகிறது. அதாவது டிகே சிவக்குமார், சித்தராமையா இருவரில் யார் முதல்வர் என்று கேள்வி நிலவி வருகிறது.
டிகே சிவக்குமார் அங்கே காங்கிரஸ் தலைவர், எதிர்காலத்தில் காங்கிரசின் தேசிய தலைவர்களில் ஒருவராக வருவார் என்று கருதப்படும் நபர், அதோடு முன்னாள் அமைச்சர், கடந்த முறை ஜேடிஎஸ் உடன் கூட்டணி ஆட்சி அமைக்க முக்கிய காரணம் டிகே சிவக்குமார்தான்.
அதோடு தொண்டர்கள் பலம் கொண்ட தலைவர். இன்னொரு பக்கம் சித்தராமையா முன்னாள் முதல்வர், எதிர்கட்சித் தலைவர், முன்னாள் அமைச்சர், காங்கிரஸ் கட்சியின் அடையாளம், முகம், நிர்வாகிகள் பெரும்பாலும் இவர் பக்கம்தான், அரசியல் ராஜதந்திரி.
எம்ஜிஆர் - கருணாநிதி முன்பு ஒருங்கிணைந்த திமுகவில் இருந்தது போல சூழ்நிலை இது. இரண்டு பேருக்குமே மக்கள் ஆதரவு அங்கு உள்ளது. கட்சி நிர்வாகிகள் ஆதரவும் உள்ளது.
இவர்களில் யார் முதல்வராக போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெரும்பாலான எம்எல்ஏக்கள் சப்போர்ட் சித்தராமையாவிற்கும், தொண்டர்கள் சப்போர்ட் டிகே சிவக்குமாருக்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் முதல்வர் ஆவதற்கு இரண்டு பேருமே தீவிரமாக காய் நகர்த்தி வருகின்றனர். முக்கியமாக டிகே சிவக்குமார் மிக தீவிரமாக காய் நகர்த்தி வருகிறாராம்.
இப்போதும் கூட ட்விட்டரில் டிகே சிவக்குமார் பார் சிஎம் #dksivakumar4cm என்ற டேக் வைரலாகி வருகிறது. இதெல்லாம் அவரின் முதல்வர் ஆசையில் இருக்கிறாரோ என்ற கேள்வியை எழுப்பியது.
சித்தராமையா: இன்னொரு பக்கம் சித்தராமையாவும் டெல்லியில் முதல்வர் பதவிக்கு காய் நகர்த்தி வருகிறார். இந்த நிலையில் சித்தராமையாதான் முதல்வராக பதவி ஏற்பார் என்று நம்மிடம் கர்நாடக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
டிகே சிவகுமாருக்கு நிர்வாகிகள் ஆதரவு, மக்கள் பிரபலம் இருந்தாலும் எம்எல்ஏக்கள் ஆதரவு தொடங்கி தொண்டர்கள் ஆதரவு எல்லாம் சித்தராமையாவிற்கே இருக்கிறது. இதனால் டிகே சிவகுமாரே முதல்வர் பதவிக்கு திட்டமிடவில்லை என்று கூறப்படுகிறது.
அதனால் சித்தராமையாதான் அடுத்த முதல்வர். இதுபோக கர்நாடகாவில் 3 துணை முதல்வர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
சித்தராமையா முதல்வர். துணை முதல்வர்கள் 3ல் ஒருவர் வொக்கலிகா, ஒருவர் முஸ்லீம், ஒருவர் லிங்காயத்து துணை முதல்வர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அங்கே வொக்கலிகா இருக்கும் தொகுதிகளில் காங்கிரஸ் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. அவர்களுக்கு 4 சதவிகிதம் இடஒதுக்கீடு கொடுப்போம் என்று பாஜக சொல்லியதும் டிகே சிவக்குமார் காரணமாக வொக்கலிகா வாக்குகள் காங்கிரசுக்கு வந்துள்ளது.
இதை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஒரு துணை முதல்வர் பதவி.. இஸ்லாமியர்கள் 13 சதவிகிதம் பேர் கிட்டத்தட்ட அப்படியே காங்கிரசுக்கு வாக்களித்து உள்ளதாக கருதப்படுகிறது.. அதை மனதில் வைத்து அவர்களுக்கும் ஒரு துணை முதல்வர். இது போக இந்த தேர்தலில் காங்கிரசுக்கு வெளிப்படையாக ஆதரவு அளித்த லிங்காயத்து பிரிவினர். அவர்கள் பராம்பரிய பாஜக என்றாலும் இந்த முறை காங்கிரசுக்கு ஆதரவு அளித்தனர்.
ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டவர்கள் கூட பாஜகவில் இருந்து காங்கிரசுக்கு வந்தனர். இந்த நிலையில்தான் அவர்களை கருத்தில் கொண்டு லிங்காயத்து பிரிவினருக்கும் ஒரு துணை முதல்வர் பதவி அளிக்கப்படும்.
இது தொடர்பாக நாளைய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவாகும். டி கே சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவி தரப்படாது. மாறாக அவருக்கு மிக முக்கியமான இரண்டு பெரிய துறைகள் அமைச்சர் பதவிக்காக வழங்கப்படும் என்று கர்நாடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications