இலக்கை நெருங்கும் ஆதித்யா எல்1 விண்கலம்.. ஜனவரி 7-ல் நிலைநிறுத்தப்படும்.. இஸ்ரோ கொடுத்த மாஸ் அப்டேட்
பெங்களூர்: ஆதித்யா எல்1 விண்கலம் லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை சுற்றி ஜனவரி 7 ஆம் தேதி நிலைநிறுத்தப்படும் என்றும், 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள லெக்ராஞ்சியன் புள்ளியில் இருந்து ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சூரியனின் மேல்வளிமண்டலம் மற்றும் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ முடிவு செய்தது. இதற்காக ஆதித்யா எல்-1 என்ற விண்கலம் வடிவமைக்கப்பட்டது. இந்த ஆதித்யா எல்-1 விண்கலம் செப்டம்பர் மாதம் 2ம் தேதி காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.

அதன்பிறகு அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் பிஎஸ்எல்வி - சி57 ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல்-1 விண்கலம் தனியாக பிரிக்கப்பட்டு பூமியின் சுற்றுவட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. இதையடுத்து விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதை படிப்படியாக உயர்த்தப்படும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்தனர். அதன்படி மொத்தம் 5 படிநிலைகளில் விண்கலத்தின் புவி சுற்றுவட்டபாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது.
படமெடுத்து அனுப்பியது: ஆதித்யா எல்-1 விண்கலம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த விண்கலம் பூமியில் இருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் லெக்ராஞ்சியன் பாயிண்ட் 1 புள்ளியில் சூரியனை நோக்கி நிலைநிறுத்தப்படும். பின்னர் விண்கலத்தில் உள்ள 7 கருவிகள் ஆய்வை மேற்கொள்ளும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சூரியனின் மேற்வளிமண்டலம், வெளிப்புற அடுக்கு குறித்த ஆய்வுகளை ஆதித்யா எல் -1 விண்கலம் மேற்கொள்ள உள்ளது.
இதற்கிடையே ஆதித்யா எல்.1 விண்கலம் சூரிய கதிர்களை படமெடுத்து அனுப்பியுள்ளது. உயர் ஆற்றல் கொண்ட சூரிய கதிர்களை அக்.29 ஆம் தேதி ஆதித்யா எல்1 படமெடுத்து அனுப்பியது. ஆதித்யா எல் 1 விண்கலத்தில் உள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோ மீட்டர் கருவி படமெடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஆதித்யா எல் 1 விண்கலம் அனுப்பிய இந்த டேட்டாக்கள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வினை செய்ய உதவும் எனவும் இஸ்ரோ கூறியது.
ஜனவரி 7ம் தேதி: இந்தநிலையில் ஆதித்யா எல்-1 விண்கலம் குறித்து இஸ்ரோ முக்கிய அப்டேட்டை இன்று வெளியிட்டுள்ளது. அதாவது சூரியனை ஆய்வு செய்ய கடந்த செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம் வரும் ஜனவரி 7 ஆம் தேதி விண்ணில் நிலைநிறுத்தப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ஆதித்யா எல்1 விண்கலம் லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை சுற்றி ஜனவரி 7 ஆம் தேதி நிலைநிறுத்தப்படும். 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள லெக்ராஞ்சியன் புள்ளியில் ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தப்படும். லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியில் இருந்து ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்யும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications