ஐடி ஊழியர்களுக்கு இனி தினமும் 14 மணி நேர வேலை கட்டாயம்.. பரிந்துரைத்த நிறுவனங்களால் அலறும் கர்நாடகா
பெங்களூர்: பெங்களூர் உள்பட கர்நாடகாவில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனங்களில் பணியாளர்களின் தினசரி வேலை நேரத்தை 12 + 2 என்று 14 மணிநேரமாக அதிகரிக்க வேண்டும் என்று கர்நாடகா ஐடி நிறுவனங்கள் சார்பில் அம்மாநில அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதனால் ஐடி ஊழியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் ‛சிலிக்கான் வேலி' என்று கர்நாடகா தலைநகர் பெங்களூர் அழைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அங்கு ஐடி நிறுவனங்கள் ஏராளமாக உள்ளனர். இன்போசிஸ், எச்சிஎல், விப்ரோ, ஆக்சென்ச்சர், டிசிஎஸ் உள்பட ஏராளாமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிறுவனங்களில் கர்நாடகா மட்டுமின்றி தமிழ்நாடு உள்பட நம் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் தற்போது பெங்களூர் உள்பட கர்நாடகாவில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது கர்நாடகாவில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனங்களில் பணியாளர்களின் தினசரி வேலை நேரத்தை 12 மணிநேரத்தில் இருந்து 12 + 2 என்று மொத்தம் 14 மணிநேரமாக மாற்றம் வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை என்பது கர்நாடகாவில் செயல்பட்டு வரும் ஐடி நிறுவனங்கள் சார்பில் அரசுக்கு சென்றுள்ளது.
அந்த பரிந்துரையில் கர்நாடகாவில் 14 மணிநேர பணி நேரத்தை அமல்படுத்தும் வகையில் கர்நாடகா கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் சட்டம் 1961ல் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இந்த சட்டத்திருத்தத்தின் படி 12 + 2 என்ற 14 மணிநேர பணி நேரம் அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 12 மணிநேரம் என்பது வழக்கமான பணியாகவும், மீதமுள்ள 2 மணிநேரம் என்பது கூடுதல் பணி நேரத்தையும் குறிக்கும். இதன்மூலம் தற்போது ஐடி ஊழியர்களின் பணி நேரம் 12 மணிநேரமாக உள்ள நிலையில் அதனை 14 மணிநேரமாக்க வேண்டும் என்பது தான் இந்த பரிந்துரையின் நோக்கமாகும்.
இந்நிலையில் தான் ஐடி நிறுவனங்களின் இந்த பரிந்துரையை அரசு ஏற்கும்பட்சசத்தில் அது ஐடி ஊழியர்களுக்கு கூடுதல் பணிச்சுமையை ஏற்படுத்தும். அதாவது தினமும் அவர்கள் கூடுதலாக 2 மணிநேரம் பணியாற்ற வேண்டிய சூழல் இருக்கும். இதனால் அவர்கள் குடும்பம், நண்பர்களுடன் செலவிடும் நேரம் என்பது சுருங்கும். இதனால் இந்த பரிந்துரைக்கு ஐடி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, இந்த பரிந்துரையை அரசு ஏற்க கூடாது என ஐடி ஊழியர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த வாரம் தான் ஒரு பஞ்சாயத்து முடிந்தது. அதாவது கர்நாடகாவில் அனைத்து தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளிலும் கன்னடம் பேசும் கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி நிர்வாக பிரிவுகளில் 50 சதவீதம் பேரும், நிர்வாகம் அல்லாத பிரிவில் 75 சதவீதம் பேரும், குரூப் சி மற்றும் குரூப் டி பணிகளில் 100 சதவீதம் கர்நாடகாவை சேர்ந்தவர்களுக்கு தான் பணி வழங்க வேண்டும் என்பதற்கான மசோதாவிற்கு முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இது பிற மாநிலத்தவரின் வேலையை பறிக்கும் என்பதால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக ஐடி நிறுவனங்கள் முதல் பல தொழிற்சாலைகள் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அந்த மசோதா என்பது நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்த நிலையில் தற்போது ஐடி ஊழியர்களுக்கு 14 மணிநேர பரிந்துரையை ஐடி நிறுவனங்கள் கர்நாடகா அரசுக்கு வழங்கி உள்ளது. இதற்கு ஐடி ஊழியர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications