நீங்க வரலாற்று ஆய்வாளரா? மொழியியல் வல்லுநரா? கமல்ஹாசனை விளாசிய கர்நாடகா ஹை கோர்ட்.. பரபர வாதம்!
பெங்களூர்: 'தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்' என்ற கமல்ஹாசனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் வெளியிட முடியாது என திரைப்பட வர்த்தக சபை கூறியுள்ளது. இந்த நிலையில் படத்தை வெளியிட அனுமதிக்க வேண்டுமென கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் வழக்கு தொடர்ந்தது. இன்று வழக்கு விசாரணை நடைபெற்ற போது, எந்த அடிப்படையில் நீங்கள் பேசினீர்கள்? என கேள்வி எழுப்பிய கர்நாடக உயர் நீதிமன்றம், நீங்கள் வரலாற்று ஆய்வாளரா? மொழியில் வல்லுனரா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி உள்ளது.
கமல்ஹாசன் மணிரத்னத்தோடு, முதன்முறையாக சிம்பு இணைந்திருக்கும் தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் சிம்பு, கமல்ஹாசன் உடன் அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்திருக்கிறது.
படத்தின் டீசரும், ட்ரைலரும், பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது. தொடர்ந்து இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

சென்னை, மும்பை, டெல்லி என மணிரத்னம், கமல்ஹாசன், சிம்பு, ஏஆர் ரகுமான், அசோக் செல்வன், திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் கலந்துகொண்டு படம் குறித்த தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், 'தமிழில் இருந்து பிறந்தது கன்னடம்' எனக் கூறியிருந்தார். கமல்ஹாசன் கன்னட மொழியை அவமதித்துவிட்டதாக கூறி கர்நாடகாவில் போராட்டம் வெடித்திருக்கிறது. மேலும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காவிட்டால் படத்தை கர்நாடகாவில் வெளியிட முடியாது எனவும் மிரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் மன்னிப்பு கேட்க முடியாது என கமல்ஹாசன் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இதனால் கர்நாடகாவில் தக் லைஃப் படம் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்த நிலையில் படத்தை கர்நாடகாவில் வெளியிட மாட்டோம் என கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கூறியது. இதை அடுத்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் கமல்ஹாசன்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தரப்பில் வழக்கு தொடரப்பட்டபோது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழில் இருந்து கன்னடம் வந்தது என எந்த அடிப்படையில் பேசுனீர்கள் என கமல் தரப்பை நோக்கி சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளது கர்நாடக உயர் நீதிமன்றம். மேலும்,"கன்னடம் குறித்து பேசிய கமல் என்ன? வரலாற்று ஆய்வாளரா? நீங்கள் மொழியியல் வல்லுநரா? என கேட்டதோடு ஒரு பெரும்பான்மையான மக்கள் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது" எனவும், "யாராக இருந்தாலும் மக்கள் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது" எனக் கூறியதோடு, "கமல்ஹாசன் ஒரு மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருக்கும்" எனவும் கூறினார்கள் கூறியுள்ளனர்.
மேலும் கன்னடம் தமிழில் இருந்து வந்ததற்கான ஆதாரம் உள்ளதா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கமல் பேசிய வீடியோக்களையும் லேப்டாப்பில் பார்த்தனர். அதற்குப் பிறகு "கமல்ஹாசனின் பேச்சால் சமூக நல்லிணத்திற்கு பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என கூறியதோடு வழக்கின் விசாரணையை பிற்பகலுக்கு ஒத்தி வைத்தனர்.












Click it and Unblock the Notifications