ரீல் ஹீரோ.. ரியல் வில்லன்! ரேணுகா ஸ்வாமி கொலை வழக்கில் ஜாமீன் கோரிய தர்ஷன்! மனைவி செய்த காரியம்!
பெங்களூரு: கன்னட நடிகர் தர்ஷனின் காதலியான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச படங்கள் அனுப்பியதாக, அவரது ரசிகர் ரேணுகாசுவாமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது. ஒருவேளை அவருக்கு ஜாமீன் கிடைத்தால் அவரை அழைத்துச் செல்ல தனி ஹெலிகாப்டரை அவரது மனைவி ஏற்பாடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கன்னட திரை ரசிகர்களால் சேலஞ்சிங் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் தர்ஷன். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில் கன்னட திரையுலகில் நடிகையாக வலம் வரும் பவித்ரா கவுடாவுடன் முறை தவறிய பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் தொடர்ந்து பவித்ரா கவுடாவுக்கு மிரட்டல்கள் வந்தன. குறிப்பாக ரேணுகா சாமி என்பவர் பவித்ரா கவுடாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆபாசமாக மெசேஜ் அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.
தர்ஷனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கும் நிலையில் குழந்தைகளை விட்டுவிட்டு பவித்ரா கவுடாவுடன் தர்ஷன் இருப்பதை விரும்பாத அவரது தீவிர ரசிகரான ரேணுகா சாமி, தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்திருக்கிறார். மேலும் ஆபாச புகைப்படங்களை, செய்திகளையும் அனுப்பி வந்துள்ளார். ரேணுகாசாமி, நடிகை பவித்ராவுக்கு இன்ஸ்டா தளத்தில் பவித்ர கவுடா என்ற பெயரில் மெசேஜ் செய்ததும், அதில் நடிகையின் தீவிர ரசிகர் என்றும், உடலுறவு கொள்ள வருமாறு அழைப்பு விடுத்ததும் தொடர்ந்து தனது ஆபாச புகைப்படத்தை அனுப்பியதே கொலைக்கான மூல காரணம் எனவும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தொடர்ந்து தனது மேனேஜர் மூலம் ரேணுகா சாமியுடன் பெண் போல பேசி அவரது விவரங்களைக் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பவித்ரா கவுடா இது குறித்து நடிகர் தர்ஷனிடம் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து தனது மேனேஜர் மூலம் ரேணுகா சாமியுடன் பெண் போல பேசி அவரது விவரங்களைக் கண்டுபிடித்துள்ளார் தர்ஷன். இதை அடுத்து தனது ரசிகர் மன்ற தலைவரான ராகவேந்திரா மூலம் ரேணுகா சாமியை, சித்ரதுர்கா பகுதியில் இருந்து பெங்களூருக்கு வரவழைத்து இருக்கிறார் தர்ஷன்.
தொடர்ந்து அவரை தனியாக அடைத்து வைத்து சரமாரியாக தாக்கி இரும்பு கம்பியால் அடித்து உதைத்துள்ளனர். பவித்ரா கவுடாவும் அவரை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரேணுகா சாமி உயிரிழந்த நிலையில் அவரது உடல் மறைக்கப்பட்டது. தொடர்ந்து ரேணுகா சாமியை காணவில்லை என புகாரை தொடர்ந்து அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.
இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கின் குற்ற பத்திரிக்கை பெங்களூர் 29ஆவது முதன்மை அமர்வு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் பவித்ரா கவுடா முதல் குற்றவாளியாகவும், தர்ஷன் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். வழக்கில் மொத்தம் 231 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் ரேணுகா சுவாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் தர்ஷன் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என பெங்களூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த 23ஆம் தேதி இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், தர்ஷனுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு ஆட்சேபனை தெரிவிக்க வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜாமீன் மனு மீதான வழக்கு விசாரணை இன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தர்ஷனுக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
விசாரணை நடைபெற இருக்கும் பெங்களூரு செசன்ஸ் நீதிமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒருவேளை ஜாமீன் கிடைத்தால் பல்லாரி சிறையில் இருந்து தர்ஷன் விடுவிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இருந்து தர்ஷனை பெங்களூருக்கு அழைத்து வருவதற்காக அவரது மனைவி விஜயலட்சுமி தனி ஹெலிகாப்டரை ஏற்பாடு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
பெங்களூருவைச் சேர்ந்த தனியார் ஹெலிகாப்டர் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் எதற்காக முன்பதிவு செய்யப்பட்டு இருக்கும் நிலையில் தர்ஷனுக்கு ஜாமீன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. விசாரணைக்கு பிறகே ஜாமீன் கிடைக்குமா? கிடைக்காதா? என்பது தெரிய வரும் நிலையில் அதற்கு முன்னதாகவே மனைவி ஹெலிகாப்டர் புக் செய்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்!












Click it and Unblock the Notifications