“இதுதான் நம் முதுகெலும்பு”.. காவிரி விவகாரத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் வைத்த கோரிக்கை
பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு உரிய அளவு நீரை திறந்து விட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார்.
காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராட வேண்டியதாக இருக்கிறது. இந்த முறையும் காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இறுதி தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை வழங்கவில்லை. எனவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. தற்போது செப்டம்பர் மாதம் முடிய இருக்கிறது. இருப்பினும் ஆகஸ்ட் மாதத்திற்கான 37.9 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா இன்னும் வழங்கவில்லை.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தை தமிழ்நாடு அரசு நாடியிருந்தது. கடைசியாக கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி மனுவை விசாரித்த நீதிமன்றம் ஆணையம் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 1ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். ஆனால் அன்று இந்த வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்படவில்லை. இதனால் தமிழக அரசு நீதிமன்றத்தில் முறையிட்டது. இதனையடுத்து செப்.6ம் தேதி விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது.
ஆனால் இந்த வழக்கு விசாரணை அமர்வில் இருந்த நீதிபதி பி.எஸ்.நரசிம்மா விடுப்பில் இருந்ததால் அன்றும் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை. இப்படி தள்ளி தள்ளியே இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். அதன்படி இன்று வழக்கு விசாரணை நடைபெற இருக்கிறது. இதற்கிடையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறது.

முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் 24வது கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து விநாடிக்கு 5,000 கனஅடி தண்ணீரை 15 நாட்களுக்கு செப்.19 முதல் திறந்து விட வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இப்படியாக தமிழக அரசும், கர்நாடக அரசும் காவிரி தண்ணீருக்காக போராடி வரும் நிலையில், கன்னட திரையுலக சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், காவிரி விவகாரத்தில் இரு மாநில தலைவர்களும் சுமூக தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் "விவசாயி நாட்டின் முதுகெலும்பு, நம் காவேரி விவசாயியின் முதுகெலும்பு. ஏற்கனவே மாநிலத்தில் போதிய மழை இல்லாததால் விவசாயிகள் சிரமத்தில் உள்ளனர். எனவு இந்த விவகாரத்தில் இரு மாநில தலைவர்களும், நீதிமன்றமும் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து சுமூக தீர்வு காண வேண்டும் என்பதே எனது கோரிக்கை" என்று கூறியுள்ளார்.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications