இந்தியாவில் நுழைந்த புதிய வைரஸ்.. பெங்களூருவில் 2 பேருக்கு அறிகுறி.. 3வது அலை பரவலா?

புதிய வகை வைரஸ் அறிகுறி 2 பேருக்கு பரவி உள்ளதாக கூறப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வரும் புதிய வகை ஏஒய்.4.2 ரக கொரோனா வைரஸ், பெங்களூருவில் தொற்று பாதித்த 2 நோயாளிகளுக்கு பரவியிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கர்நாடக அரசு சில கட்டுப்பாடுகளை உடனடியாக விதித்துள்ளது.

Recommended Video

    திடீரென அதிகரிக்கும் Coronavirus பாதிப்புகள்.. உலக நாடுகளை அச்சுறுத்தும் AY.4.2 Variant

    சீனாவில் உருவான இந்த கொரோனா வைரஸ், உலகெங்கிலும் பரவி பெரும் கிலியை இன்றுவரை உண்டு பண்ணி வருகிறது..

    இதற்கு முறையான மருத்துவம் கண்டுபிடிக்க முடியவில்லை.. எனினும், எத்தனையோ விதமான முயற்சிகளுக்கு பிறகுதான் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டு அதனை மக்களுக்கு செலுத்தி வருகின்றன.

    தொற்று

    தொற்று

    இந்தியாவில் கொரோனாவின் முதல் அலை, 2வது அலை வந்து போயுள்ளன.. இதில் 2வது அலை அதிக பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.. டெல்டா வகை வேரியண்ட் என்ற வைரஸ்தான் மக்களை மிரட்டி கொண்டிருந்தது.. இப்படிப்பட்ட சூழலில், AY.4.2 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவுக்குள் நுழைந்துள்ளதாக இந்தியன் சார்ஸ் - கோவிட் 2 ஜீனோமிக் கான்சார்டியம் (INSACOG) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது...

     வைரஸ்

    வைரஸ்


    மத்திய பிரதேசம், இந்தூரில் உருமாற்றமடைந்த AY.4.2 என்ற வைரஸ் பரவியுள்ளது.. பிறகு மகாராஷ்டிராவிலும் இந்த வைரஸ் ஊடுருவி உள்ளது.. AY.4.2 வைரஸானது, இதற்கு முன்பு உருமாற்றமடைந்த வைரஸ் கிருமிகளை விட, 6 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டதாம்.. AY.4.2 எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுகிறதா என்பது குறித்து ஐசிஎம்ஆர், எம்சிடிவி ஆய்வு செய்யப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

     பெங்களூரு

    பெங்களூரு

    இந்நிலையில், புதிய வகை ஏஒய்.4.2 ரக கொரோனா வைரஸ், பெங்களூருவில் தொற்று பாதித்த 2 நோயாளிகளுக்கு பரவியிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது... புதிய இதையடுத்து, கர்நாடக அரசு சில கட்டுப்பாடுகளை உடனடியாக விதித்துள்ளது... மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் கே. சுதாகர் இதை பற்றி சொல்லும்போது, கொரோனா தொற்றின் உருமாறிய வைரஸ் அவர்களை பாதித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், அவர்களது மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது...

     டெஸ்ட்

    டெஸ்ட்

    மருத்துவ நிபுணர்களுடனும் கலந்து பேசியுள்ளேன்... முதல்வரை சந்தித்து அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க உள்ளேன்.. ஒரு வேளை, அந்த டெஸ்ட் ரிப்போர்ட்டில், புதுவகை வைரஸ் உறுதி செய்யப்பட்டால், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் ஆலோசிக்க வேண்டும்... பிரிட்டன் மற்றும் ரஷ்யாவில் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக 3வது அலை தொடங்கிவிட்டது...அடுத்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்" என்றார்.

    விளக்கம்

    விளக்கம்

    இதை பற்றி பெங்களூரு மாநகராட்சி சுகாதார துணை ஆணையர் திரிலோக் சந்திரன் சொல்லும்போது, "புதிய வகை வைரஸ் பாதித்தவர்கள் 2 பேருமே ஏற்கனவே கொரோனா அறிகுறிகள் எதுவும் இல்லாதவர்கள்தான்.. அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்தவர்கள்... அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களும் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கும் டெஸ்ட் செய்ததில் யாருக்கும் பாதிப்பில்லை என்பது தெரிய வந்துள்ளது... அதனால், இந்த புதிய வகை கொரோனா பயம் தேவையில்லை" என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+