Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛ரகசியம்’.. கர்நாடகா முதல்வர் வேட்பாளர் யார்? சொல்லமாட்டோம் என உஷாராகும் காங்., பாஜக!ஏன் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ், பாஜகவை பொறுத்தமட்டில் பல மாநில தேர்தல்களில் முதல்வர் வேட்பாளர் என ஒருவரை அறிவித்து தேர்தலை எதிர்கொள்வார்கள். ஆனால் கர்நாடகா தேர்தலில் இருகட்சிகளும் முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை பகிரங்கமாக அறிவிப்பதில் இருந்து பின்வாங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகின உள்ளன. மேலும் இதன் பின்னணியில் உள்ள தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

கர்நாடகா சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 24ம் தேதி முடிவடைய உள்ளது. இந்நிலையில் தான் அதற்கு முன்பாக மே 10ம் தேதி கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை என்பது மே மாதம் 13 ம் தேதி நடக்கிறது.

கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் ஒரே கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதனால் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியாக காங்கிரஸ், ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகள் மேஜிக் நம்பரான 113யை குறிவைத்த பிரசார வியூகங்களை வகுத்து வருகின்றன.

கருத்து கணிப்பு முடிவுகள்

கருத்து கணிப்பு முடிவுகள்

இந்நிலையில் தான் பல கருத்து கணிப்புகள் வெளியாகி உள்ளன. இதில் சில கருத்து கணிப்புகள் மட்டுமே கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் என தெரிவித்துள்னள. மாறாக பெரும்பான்மையான கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக மாறலாம். இருப்பினும் ஆட்சியமைக்க தேவையான 113 இடங்களில் வெல்வதில் சிக்கல் உள்ளதாக தெரிவித்துள்ளது. அதோடு பாஜக 80 முதல் 95 தொகுதிகளில் வெற்றி பெற்று 2வது பெரிய கட்சியாக இருக்கும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் தான் மீண்டும் மாஜி பிரதமர் எச் டி தேவேகவுடாவின் ஜேடிஎஸ் கட்சி கிங்மேக்கராக மாறலாம் என கூறப்படுகிறது. v

முதல்வர் வேட்பாளர் யார்?

முதல்வர் வேட்பாளர் யார்?

பொதுவாக பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஒரு மாநில தேர்தலை சந்திக்கும்போது முதல்வர் வேட்பாளராக ஒருவரை முன்னிறுத்தும். சமீபகாலமாக இந்த யுக்தியை இருகட்சிகளும் சில சமயங்களில் கைவிட்டுள்ளன. அந்த வகையில் தற்போதும் கர்நாடகா சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் மற்றும் பாஜக என இருகட்சிகளும் முதல்வர் வேட்பாளர் என்று இதுவரை யாரையும் அறிவிக்கவில்லை. வரும் நாட்களிலும் இருகட்சிகளும் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் தான் தேர்தலை எதிர்கொள்ளும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் பின்னணியில் தான் முக்கிய விஷயம் உள்ளது.

பாஜகவின் பிளான் என்ன?

பாஜகவின் பிளான் என்ன?

கர்நாடகாவில் பாஜகவின் முகமாக லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த எடியூரப்பா தான் உள்ளார். தற்போது அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேலும் அவர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவரது சமுதாயத்தை சேர்ந்தவரும், அவரது சீடராக அறியப்படும் பசவராஜ் பொம்மையை பாஜக முதல்வராக்கியது. இந்நிலையில் தான் பசவராஜ் பொம்மை ஆட்சிக்காலத்தில் 40 சதவீத ஊழல் பிரச்சனை எழுந்தது. இது வரக்கூடிய தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது. இந்த வேளையில் பசவராஜ் பொம்மை தான் முதல்வர் வேட்பாளர் என அறிவித்தால் அது இன்னும் கூட பாஜகவுக்கு சரிவை ஏற்படுத்தலாம். இதனால் பாஜகவும் இந்த தேர்தலை முதல்வர் வேட்பாளர் யார்? என்பதை அறிவிக்காமல் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர். அதாவது அசாம் பாணியை பாஜக பின்பற்ற உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது அசாம் சட்டசபை தேர்தல் வரை பாஜகவின் சர்பானந்தா சோனோவால் முதல்வராக இருந்த நிலையில் வெற்றிக்கு பிறகு ஹிமந்தா பிஸ்வா சர்மாவை கட்சி மேலிடம் முதல்வராக்கியது. அதேபோல் கர்நாடகாவிலும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் புதுமுகத்தை, அதேவேளையில் மக்கள் செல்வாக்கு உள்ள நபரை முதல்வராக்க பாஜக நினைக்கலாம் என கூறப்படுகிறது.

காங்கிரஸ் விவகாரம் என்ன?

காங்கிரஸ் விவகாரம் என்ன?

மேலும் காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் முதல்வர் பதவிக்கு 2 பேர் குறிவைத்துள்ளனர். அதாவது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் ஆகியோர் முதல்வர் பதவியை பெறும் முனைப்பில் செயல்பட்டு வருகின்றனர். இருவருமே தங்களை முதல்வர் வேட்பாளர்களாக கூறி வருகின்றனர். இருப்பினும் முறைப்படி கட்சி மேலிடம் இன்னும் அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.

சித்தராமையா அறிவிக்கப்படுவாரா?

சித்தராமையா அறிவிக்கப்படுவாரா?

இதில் முன்னாள் முதல்வரான சித்தராமையா தற்போது எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருகிறார். இவருக்கு மாநிலம் முழுவதும் செல்வாக்கு உள்ளது. குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர், எஸ்சி, எஸ்டி மக்களிடம் சித்தராமையா மிகவும் பிரபலமாக உள்ளார். இதனால் இவர் முக்கிய நபராக பார்க்கப்படுகிறார். மேலும் கர்நாடகாவை பொறுத்தமட்டில் 1977ம் ஆண்டுக்கு பிறகு முதல்வர் பொறுப்பை ஏற்று 5 ஆண்டு அதில் தொடர்வது மிகவும் சிரமமான காரியம். ஆனாலும் அதனை முதல் முறையாக கடந்த 2013 முதல் 2018 வரை 5 ஆண்டு ஆட்சியை முழுமையாக நிறைவு செய்த ஒரே முதல்வர் என்ற பெயரை சித்தராமையா பெற்றார். அனைத்து சமுதாயத்தினரையும் அரவணைத்து செல்லும் பக்குவம், மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துதல் உள்ளிட்டவற்றில் சித்தராமையா கைதேர்ந்தவராக உள்ளார். இதனால் தான் சித்தராமையா தனக்கு 2வது முறையாக முதல்வர் பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பம்பரமாக சுற்றி தேர்தல் பணி செய்து வருகிறார்.

டிகே சிவக்குமாருக்கு வாய்ப்பா?

டிகே சிவக்குமாருக்கு வாய்ப்பா?

அதேவேளையில் டிகே சிவக்குமார் மாநில காங்கிரஸ் தலைவராக உள்ளார். இவர் ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். மேலும் பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை பாஜக இழுக்க முயன்றபோது காங்கிரஸ் கட்சிக்கு தோள் கொடுத்து உதவியவர் தான் இந்த டிகே சிவக்குமார். பணபலம் மிக்க இவர் கர்நாடகாவில் மிகவும் செல்வாக்கு மிக்க தலைவராக உள்ளார். மேலும் முன்னாள் முதல்வர் குமாரசாமி ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர். இதனால் ஒக்கலிகர் சமுதாயத்தினர் அவரது ஜேடிஎஸ் கட்சிக்கு தான் வாக்களித்து வருகின்றனர். இந்த முறை ஒக்கலிகர் வாக்கு வங்கியை காங்கிரஸ் பக்கம் திருப்ப டிகே சிவக்குமார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியை பொறுத்தமட்டில் இவரும் தவிர்க்க முடியாத தலைவராக உள்ளார். இதனால் அவர் தன்னை முதல்வர் வேட்பாளராக கூறி வருகிறார்.

காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?

காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?

இருப்பினும் கூட காங்கிரஸ் கட்சி முதல்வர் வேட்பாளரை அறிவிப்பதை விரும்பவில்லை. அதாவது காங்கிரஸ் சார்பில் தற்போது முதல்வர் வேட்பாளர் என சித்தராமையா அல்லது டிகே சிவக்குமார் ஆகியோரில் ஒருவரை அறிவித்தால் அது கோஷ்டி பூசலை உருவாக்கும். மேலும் கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் தான் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்டாமல் உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

ஜேடிஎஸ் முதல்வர் வேட்பாளர் யார்?

ஜேடிஎஸ் முதல்வர் வேட்பாளர் யார்?

மாறாக ஜேடிஎஸ் கட்சியை பொறுத்தமட்டில் இந்த தேர்தலில் 30 முதல் 40 இடங்களுக்குள் வெற்றி பெற வாய்ப்புள்ளது என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனால் அந்த கட்சியால் தனித்து ஆட்சியை பிடிக்க முடியாது. ஆனாலும் தொங்கு சட்டசபை வந்தால் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஜேடிஎஸ்ஸை தான் நாடும். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜேடிஎஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தான் தொடர்ந்து வருகிறது. மேலும் ஜேடிஎஸ் கட்சியை பொறுத்தமட்டில் முதல்வர் அரியணையில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மகன் குமாரசாமி தான் அமர்வார். இந்த தேர்தலிலும் பாஜக அல்லது காங்கிரஸில் கூட்டணி ஆட்சி அமைந்து ஜேடிஎஸ்க்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டால் மீண்டும் குமாரசாமிக்கு தான் அதிர்ஷ்டம் அடிக்கும். இதனால் ஜேடிஎஸ்ஸை பொறுத்தமட்டில் எந்த குழப்பமும் இல்லை. அந்த கட்சியில் முதல்வர் வேட்பாளராக குமாரசாமி தான் இருக்கிறார். மாறாக காங்கிரஸ், பாஜகவில் தான் முதல்வர் முகம் யார் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இதற்கு பதில் கிடைக்க வேண்டும் என்றால் நாம் மே மாதம் 13ம் தேதி வரை காத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+