பக்காபிளான்.. கர்நாடகா தேர்தலில் தொகுதி மாறிய சித்தராமையா..கோலாருக்கு குறிவைத்தது ஏன்? முழுபின்னணி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா தொகுதி மாறி போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். கடந்த முறை பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சித்தராமையா தற்போது கோலார் சட்டசபை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். பக்கா பிளானோடு இந்த தொகுதி மாற்றம் நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில் அதன் பின்னணியில் உள்ள முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் தான் கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் ஒரு கட்சி 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

கர்நாடகாவில் ஆட்சியை தக்க பாஜக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது. பாஜகவை தோற்கடித்து கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. இதுதவிர ஜனதாதளம்(எஸ்) மற்றும் ஆம்ஆத்மி கட்சிகள் கோதாவில் குதித்துள்ளன. இதனால் வரும் தேர்தலில் கர்நாடகாவில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளது.

 வேட்பாளர் தேர்வு தீவிரம்

வேட்பாளர் தேர்வு தீவிரம்

இந்நிலையில் தான் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணி வேகமெடுத்துள்ளன. முன்னாள் முதல்வர் எச்டி குமாரசாமியின் ஜனதாதளம் (எஸ்) கட்சி முதற்கட்டமாக 93 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இதில் ராமநகர் மாவட்டம் சென்னபட்டணா தொகுதியும் குமாரசாமியும், அவரது மகன் நிகில் குமாரசாமி ராமநகரிலும் போட்டியிடுகிறார்கள். இதேபோல் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் இந்த மாதத்தில் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

கோலார் தொகுதிக்கு மாறிய சித்தராமையா

கோலார் தொகுதிக்கு மாறிய சித்தராமையா

இந்நிலையில் தான் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா தொகுதி மாறி வரும் சட்டசபை தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியிடலாம் என்ற தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் தான் கோலார் தொகுதியில் போட்டியிடுவதாக நேற்று சித்தாரமையா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இருப்பினும் இறுதி முடிவு கட்சி மேலிடம் சார்ந்தது என்றார். கட்சி மேலிடம் எப்படியும் சித்தராமையாவின் முடிவுக்கு பச்சைக்கொடி காட்டிவிடும் என்பதால் அவர் கோலாரில் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

பாதாமியை கைவிட்ட சித்தராமையா

பாதாமியை கைவிட்ட சித்தராமையா

கடந்த 2013 தேர்தலில் மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் வெற்றி பெற்று காங்கிரஆட்சியில் முதல்வரானார். 2018 வரை முழுமையாக 5 ஆண்டு முதல்வராக இருந்த நிலையில் 2018 ல் நடந்த சட்டசபை தேர்தலில் தொகுதி மாறினார். வருணா தொகுதியில் சித்தராமையாவின் மகன் யதீந்திராவை களமிறக்கிவிட்டு சித்தராமையா தொகுதியை மாறி போட்டியிட்டார். மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி, பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதிகளில் 2018 ல் களமிறங்கினார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் ஜிடி தேவேகவுடாவிடம் சித்தராமையா தோல்வியடைந்த நிலையில் பாதாமியில் போராடி குறைந்த ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏவானார். இந்நிலையில் தான் தற்போதைய தேர்தலில் சித்தராமையா வரும் தேர்தலில் கோலார் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

 தொகுதி மாற்ற காரணம் என்ன?

தொகுதி மாற்ற காரணம் என்ன?

சித்தாரமையா மைசூரை சேர்ந்தவர். இவர் தற்போது பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் தான் வரும் தேர்தலில் அவர் கோலாரில் களமிறங்கி உள்ளார். இந்த தொகுதி மாற்றத்தின் பின்னணியில் முக்கியமான காரணங்கள் உள்ளன. அதாவது சித்தாராமையாவுக்கு தற்போது 75 வயது ஆகிறது. அவர் மைசூரை சேர்ந்தவர். ஆனால் கடந்த முறை அவர் பாதாமி தொகுதியில் வெற்றி பெற்றார். பெங்களூரில் இருந்து பாதாமி சுமார் 450 கிலோமீட்டர் தொலைவிலும், மைசூரில் இருந்து பாதாமிக்கு 537 கிலோமீட்டர் தூரமும் உள்ளது. இதனால் அடிக்கடி மக்களை சந்திக்க முடியாத நிலையில் தான் அவர் கோலார் தொகுதியை தேர்வு செய்துள்ளார். மேலும் தற்போது கோலாரில் இருந்து பெங்களூரை ஒரு மணிநேரத்திலும் மைசூரை 3 மணிக்கு நேரத்துக்கு உள்ளாகவும் அடையலாம் என்பதால் இது சித்தராமையாவுக்கு சாதகமாக இருக்கும்.

சாதி ஓட்டுக்களுக்கு குறி

சாதி ஓட்டுக்களுக்கு குறி

மேலும் கோலார் தொகுதியில் சித்தராமையாவின் குருபா சமுதாயத்தை சேர்ந்த வாக்காளர்கள் அதிகம் உள்ளன. அதேபோல் முஸ்லிம்கள், எஸ்சி, எஸ்டி மக்களும் வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகளாக உள்ளனர். இதனால் தான் சித்தாராமையா கோலார் தொகுதிக்கு மாறியுள்ளார். மொத்தம் 2.31 லட்சம் வாக்காளர்கள் இந்த தொகுதியில் உள்ளனர். இதில் 45,000 முஸ்லிம் ஓட்டுக்கள், ஒக்கலிகர் சமுதாயத்தின் 40 ஆயிரம் ஓட்டுக்கள், சித்தராமையாவின் குருபா சமூகத்தின் 25,000ஆயிரம் ஓட்டுக்கள், எஸ்சி, எஸ்டி மக்களின் 21 ஆயிரம் ஓட்டுக்கள், 9 ஆயிரம் கிறிஸ்தவர்கள் உள்ளன. இந்த பிரிவினரின் ஓட்டுக்கள் தனக்கு கைக்கொடுக்கும் என சித்தராமையாக கணக்கு போட்டுள்ளார். சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களின் காவலனாக தன்னை சித்தராமையா அடையாளப்படுத்தி கொண்டு செயல்பட்டு வரும் நிலையில் சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூக மக்கள் அதிகம் உள்ள கோலார் தொகுதியை அவர் தேர்வு செய்துள்ளார். இதுதவிர பாஜகவின் ஓட்டு வங்கியாக கருதப்படும் லிங்காயத் தவிர பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளின் மக்களின் ஓட்டுக்களும் தனக்கு கிடைக்கும் என சித்தராமையா நம்பி உள்ளதால் துணிந்து கோலாரில் களமிறங்கி உள்ளார்.

எம்எல்ஏவின் ஆதரவு

எம்எல்ஏவின் ஆதரவு

மேலும் தற்போது கோலார் தொகுதி எம்எல்ஏவாக சீனிவாச கவுடா உள்ளார். இவர் ஜனதாதளம் (எஸ்) கட்சியை சேர்ந்தவர். இவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் சித்தராமையா போட்டியிட்டால் தொகுதியை விட்டு கொடுப்பதாக தெரிவித்தார். அதன்படி சித்தராமையா கோலாரில் களமிறங்கி உள்ளார். மேலும் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தால் சித்தராமையா மீண்டும் முதல் அமைச்சராக வாய்ப்புள்ளது. இது அவருக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அடுத்த முதல் அமைச்சர் போட்டியில் சித்தராமையாவுடன், முன்னாள் அமைச்சரும், தற்போதைய மாநில தலைவருமான டிகே சிவக்குமார் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+