ஜெயநகர் தொகுதியில் ட்விஸ்ட்! நள்ளிரவு தாண்டியும் முடிவு தெரியவில்லை.. மறு வாக்கு எண்ணிக்கை..பரபரப்பு

கர்நாடக சட்டமன்றத்திற்கு கடந்த 10 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் இடையே மும்முனை போட்டி நிலவியது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று (13 ஆம் தேதி) எண்ணப்பட்டன.
இதில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பெரும்பான்மைக்கு தேவையான 113 தொகுதிகளை தாண்டி காங்கிரஸ் வெற்றி பெற்றது. பாஜக 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மதசார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் வென்றுள்ளது.
தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் நேற்று மாலையே தெரிந்து விட்ட போதிலும் ஜெயநகர் தொகுதியில் தொகுதியில் மட்டும் முடிவு தெரியவில்லை. காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டிக்கும் பாஜக வேட்பாளர் ராம மூர்த்திக்கு இடையே வாக்க்குவித்தியாசம் மிகக் குறைந்த அளவே இருந்தது.
சவுமியா ரெட்டி முன்னிலை இருந்தாலும் வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று ராமமூர்த்தி கோரிக்கை விடுத்தார். இதனால், மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. தபால் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டது. மூன்று முறை வாக்கு எண்ணிக்கை நடைபெற்றும் முடிவு அறிவிக்கப்படவில்லை.
தற்போது பாஜக வேட்பாளர் முன்னிலை பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. நள்ளிரவு தாண்டியும் முடிவு அறிவிப்பதில் தாமதம் நீடிக்கிறது. வாக்கு எண்ணும் மையத்திற்கு காங்கிரஸ் கட்சியின் டிகே சிவக்குமார் உள்ளிட்டோர் வருகை தந்தனர். இதனால் ஜெயநகர் தொகுதி முடிவு அறிவிப்பதில் நீடிக்கும் இழுபறியால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications