கட்டுக்கட்டாய் ரூ.7.70 கோடி பறிமுதல்.. வசமாய் சிக்கிய மகன்.. கர்நாடகா பாஜக எம்எல்ஏவின் பதவி பறிப்பு
கர்நாடகா பாஜக எம்எல்ஏ மதல் விருபாக்சப்பாவின் மகன் பிரசாந்த் மகன் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக லோக்ஆயுக்தாவால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
பெங்களூர்: டெண்டர் விஷயத்தில் கர்நாடகா பாஜக எம்எல்ஏவான மதல் விருபாக்சப்பா சார்பில் அவரது மகன் ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியபோது லோக்ஆயுக்தாவிடம் சிக்கினார். இதையடுத்து அவரது மகனின் அலுவலம் மற்றும் எம்எல்ஏவின் அலுவலகத்தில் லோக்ஆயுக்தா அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய நிலையில் மொத்தம் ரூ.7.70 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் பாஜக எம்எல்ஏ மதல் விருபாக்சப்பா வகித்து வந்த முக்கிய பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதற்கான ராஜினாமா கடிதத்தை அவர் அரசுக்கு எழுதியுள்ளார்.
கர்நாடகாவை பொறுத்தமட்டில் ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் பல்வேறு வாரியங்கள் மற்றும் அரசு நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் நியமன பதவிகளிலும் இருப்பது வழக்கமான ஒன்றாகும். அதாவது அமைச்சர் பதவி கிடைக்காதவர்களுக்கு இந்த பொறுப்புகள் வழங்கி சமாதானப்படுத்துவதை ஒவ்வொரு கட்சியினரும் பின்பற்றி வருகின்றனர்.
அந்த வகையில் கர்நாடகா அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனம்(கேஎஸ்டிஎல்) உள்ளது. மைசூரு சாண்டல் சோப் உள்ளிட்டவற்றை இந்த நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இதன் தலைவராக தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பாஜக எம்எல்ஏவான மதல் விருபாக்சப்பா பொறுப்பு வகித்து வந்தார்.

மகன் கைது
இந்நிலையில் எம்எல்ஏ மதல் விருபாக்சப்பாவின் மகன் பிரசாந்த் மதல், பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் (BWSSB)தலைமை கணக்காளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தான் கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட்டின் Raw Material டெண்டர் வழங்க ஒருவரிடம் இருந்து எம்எல்ஏ மதல் விருபாக்சப்பா சார்பில் மகன் பிரசாந்த் மதல் ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கினார். இதையடுத்து பிரசாந்த மதலை லோக்ஆயுக்தா போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் ரூ.40 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.7.70 கோடி பறிமுதல்
இதையடுத்து ஊழல் தடுப்பு பிரவில் வழக்குப்பதிவு செய்த லோக்ஆயுக்தா அதிகாரிகள் அவரது வீடு, அலுவலகத்தில் அதிரடியாக சோதனை செய்தனர். இந்த சோதனையின்போது அலுவலகத்தில் இருந்து ரூ.1.70 கோடியும், வீட்டில் இருந்து ரூ.6 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் ரூ.7.70 கோடி பறிமுதலானது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கட்டுக்கட்டாய் பணம்
இதற்கிடையே தான் வழக்கில் சோதனை நடத்தி பறிமுதல் செய்யப்பட்ட பணம் கட்டுக்கட்டாக வைத்திருக்கும் படங்கள் வெளியாகி உள்ளன. கட்டில் மேல் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பணம் இணையவாசிகளை மலைக்க செய்துள்ளது. மேலும் இதுதொடர்பாக பாஜக எம்எல்ஏவான மதல் விருபாக்சப்பாவிடமும் லோக்ஆயுக்தா விசாரிக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் விரைவில் அவருக்கு சம்மன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

முதல்வர் சொன்னது என்ன?
கர்நாடகாவில் இன்னும் 2 அல்லது 3 மாதத்துக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே கர்நாடகா பாஜக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில் இந்த சம்பவம் அக்கட்சிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும். தற்போது நடந்த விஷயத்துக்கும், பாஜக கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

தலைவர் பதவிக்கு ராஜினாமா
இதற்கிடையே கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பு எம்எல்ஏ மதல் விருபாக்சப்பாவிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. அதாவது அவர் தனது பொறுப்பை ராஜினாமா செய்வதாக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் பசவராஜ் பொம்மை கேட்டு கொண்டதன் பேரில் மதல் விருபாக்சப்பா அந்த பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் மதல் விருபாக்சப்பா சார்பில் சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‛எனக்கும் லோக் ஆயுக்தா சோதனைக்கும் எந்த தொடர்பும் கிடையாது. உள்நோக்கத்துடன் என்னையும், எனது குடும்பத்தையும் பழிவாங்கும் செயலாக இது உள்ளது' என கூறியுள்ளார்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications