பாலியல் வழக்கில் சாமியார்.. ஓட்டுக்காக கட்சிகள் அமைதி! கர்நாடக அரசு மீதே பாஜக எம்எல்சி பரபர புகார்
பெங்களூரு: கர்நாடகாவில் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள லிங்காயத்து சாமியாருக்கு எதிராக பேசினால் வாக்குகள் குறைந்துவிடும் என்று அரசியல் கட்சிகள் அஞ்சுவதாக பாஜக சட்டமேலவை உறுப்பினர் எச்.விஸ்வநாத் குற்றம்சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் லிங்காயத்து மதத்தினரின் முருகமடம் இயங்கி வருகிறது. இங்கு மடாதிபதியாக செயல்பட்டு வருபவர் சிவமூா்த்தி முருகா சரணரு. இந்த மடம் சார்பில் தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இங்கு ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் 10ம் வகுப்பு மாணவிகள் 2 பேரை மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

மடாதிபதி மீது புகார்
இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள், மைசூரில் உள்ள அரசு சாரா சமூக சேவை அமைப்பில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தை தொடர்பு கொண்டு புகாரளித்துள்ளனர். அதன் அடிப்படையில், குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரி, மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது மைசூர் நஜர்பாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போக்சோ வழக்கு
இதனை தொடர்ந்து மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மடாதிபதிக்கு உடந்தையாக இருந்து வந்ததாக விடுதியின் வார்டன் ரஷ்மி, பசவதித்தியா, பரமசிவன், கங்காதரய்யா ஆகியோர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

புகாருக்கு மறுப்பு
கர்நாடகாவில் அதிக செல்வாக்கு மிக்க நபராக திகழ்ந்த மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. "இந்த புகார்கள் உண்மைக்கு எதிரானவை. இதன் பின்னணியில் முன்னாள் எம்எல்ஏவும், மடத்தின் நிர்வாக அதிகாரி எஸ்கே பசவராஜன் இருக்கின்றனர்." என என்.விஸ்வநாத் தெரிவித்தார்.

முதலமைச்சர் விளக்கம்
இது குறித்து கருத்து தெரிவித்து உள்ள கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, "இது மிகவும் முக்கியமான வழக்கு. போக்சோ மற்றும் கடத்தல் வழக்கு பதியப்பட்டுள்ளது. விசாரணை நடைபெற்று வருவதால், கருத்து தெரிவிக்க தெரிவிக்க முடியாது. போலீசாருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின் உண்மை வெளிவரும்." என்றார்.

பாஜக எம்.எல்.சி
இந்த விவகாரத்தில் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணருவை கர்நாடக அரசு இதுவரை கைது செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பேசிய பாஜகவை சேர்ந்த கர்நாடக சட்டமேலவை உறுப்பினர் எச்.விஸ்வநாத், "மடாதிபதி மீது உள்துறை அமைச்சர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காத சித்ரதுர்கா எஸ்பியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

பிரதமருக்கு கடிதம்
சிறுமிகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு விரிவான கடிதம் எழுதி இருக்கிறேன். அரசியல்வாதிகள், எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் இதுகுறித்து வாய் திறக்காமல் உள்ளனர். இதைபற்றி பேசினால் வாக்குகள் குறைந்துவிடுமோ என்று அரசியல் கட்சிகள் அஞ்சுகின்றனர். வாக்குகளுக்காக சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தவரை ஆதரிக்கிறீர்களா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட்












Click it and Unblock the Notifications