சர்ச்சை போஸ்ட்.. கர்நாடகாவின் பாஜகவின் சமூக வலைதள கன்வீனர் கைது.. அடுத்தது ஜேபி நட்டாவா? பரபரப்பு
பெங்களூர்: கர்நாடகா பாஜகவின் ஐடி விங்க் கன்வீனர் பிரசாந்த் மகனூரை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் சர்ச்சைக்குரிய போஸ்ட் பதிவிட்டது தொடர்பான வழக்கில் ஏற்கனவே பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் அமித் மாளவியாவுக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அடுத்து அவர்களை போலீசார் கைது செய்கின்றனரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். கர்நாடகாவில் மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில் 2 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது. அதன்படி கடந்த மாதம் 26ம் தேதி மற்றும் கடந்த 7 ம் தேதி என தலா 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்தது.

தேர்தல் வேளையில் கர்நாடகா பாஜகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அனிமேஷன் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில், ‛‛காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதியி்ல எஸ்சி, எஸ்டி மற்றும் ஒபிசி பிரிவினருக்கான நிதி, சொத்துகளை இஸ்லாமியர்களுக்கு வழங்கவதாக கூறி உள்ளது'' என்பதை குறிக்கும் வகையிலான காட்சிகள் இருந்தன.
இதுதொடர்பாக காங்கிரஸ் சார்பில் கர்நாடகா காங்கிரஸ் சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கப்பட்டது. இந்த புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பெங்களூர் ஹைகிரவுண்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் தான் கர்நாடகா சமூக வலைதள பிரிவு கன்வீனர் பிரசாந்த் மகனூரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன்பிறகு அவர் போலீஸ் நிலையத்தின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக இந்த வழக்கு தொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவுரையின்படி அந்த கட்சியின் ஐடி விங்க் பொறுப்பாளர் அமித் மாளவியா இந்த அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, அமித் மாளவியா உள்ளிட்டோருக்கு ஹைகிரவுண்ட் போலீசார் சம்மன் அனுப்பினர்.
அதில் ‛‛சம்மன் கையில் கிடைத்த 7 நாட்களில் காலை 11 மணிக்கு ஹைகிரவுண்ட் போலீஸ் நிலைய விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் அடுத்ததாக ஜேபி நட்டா கைது செய்யப்படுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications