காவிரி விவகாரம்.. பிரச்சினைக்கு முக்கிய காரணமே மத்திய அரசுதான்.. சித்தராமையா பரபர! என்னாச்சு
பெங்களூர்: தமிழ்நாடு அரசுக்குத் தர வேண்டிய நீரைத் தரக் கர்நாடகா மறுத்து வரும் நிலையில், இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
ஒவ்வொரு முறையும் கர்நாடகாவிடம் இருந்து நமக்கான நீரை வாங்குவதே தமிழ்நாடு அரசுக்கு பெரும் போராட்டமாக இருக்கிறது. இந்த முறையும் கூட தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நீரைக் கர்நாடக அரசு தரவில்லை.

இந்த மாதம் தர வேண்டிய உரிய நீரைத் தராமல் கர்நாடக அரசு காலம் தாழ்த்துகிறது. இதனால் டெல்டா பகுதியில் வசிக்கும் விவசாயிகள் பெரும் கலக்கத்தில் இருக்கிறார்கள். இதற்கிடையே இந்த விவகாரத்தில் கர்நாடகா மீது காவிரி நீர் ஒழுங்காற்று குழுவிடம் தமிழ்நாடு அரசு இன்று புகார் தருகிறது.
சித்தராமையா: இந்தச் சூழலில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ள கருத்துகள் சர்ச்சையைக் கிளப்புவதாக இருக்கிறது. இதற்கிடையே காவிரி நதிநீர் பிரச்சினைக்குக் காரணமே மத்திய அரசு தான் என்று சித்தராமையா பரபர குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "தமிழகத்திற்கு 177 டிஎம்சி தண்ணீர் ஒதுக்கப்பட்டுள்ளது, வழக்கமாக மழை பெய்யும் ஆண்டுகளில் இந்த அளவுக்கு எளிமையாகத் தண்ணீரைத் திறந்து விட முடியும். இருப்பினும், போதியளவு மழை இல்லாத ஆண்டுகளில் அதற்கான தனி ஃபார்முலாவைப் பின்பற்ற வேண்டும். ஆனால் தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் தொல்லைகளைத் தருகிறது" என்றார்.
மத்திய அரசு தான் காரணம்: மேலும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட மத்திய பாஜக அரசு அனுமதி வழங்குவதில் காலதாமதம் செய்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இது குறித்துப் பேசிய அவர், "இந்த விவகாரத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அனுமதி தரச் சொல்லி மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும். ஏனென்றால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அரசுக்குக் கீழ் தான் வருகிறது. ஆனால் அதை அவர்கள் செய்ய மறுக்கிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.
இரு மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர் பிரச்சனை பல ஆண்டுகளாக நிலவி வரும் நிலையில் மேகதாது திட்டமே அதற்குத் தீர்வு என்று கர்நாடக வலியுறுத்தி வருகிறது. அதேநேரம் மேகதாதுவில் புதிய அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டிற்குக் கிடைக்க வேண்டிய நீர் முழுமையாகக் கிடைக்காமலேயே போய்விடும் என்பதால் தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தே வருகிறது.
ஒழுங்காற்று குழு: இது ஒரு பக்கம் இருக்க உரிய நீரைத் தர மறுக்கும் கர்நாடக மீது காவிரி நீர் ஒழுங்காற்று குழுவிடம் தமிழ்நாடு அரசு இன்று புகார் அளிக்கிறது. இன்று பிற்பகல் ஒழுங்காற்று குழு கூடும் நிலையில், அப்போது இது குறித்து தமிழ்நாடு அரசு முறையிட உள்ளது இதற்கிடையே இதில் கர்நாடக அரசின் நிலைப்பாடும் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது தமிழ்நாட்டிற்குக் காவிரி நீரைத் திறந்துவிட முடியாது என்று ஒழுங்காற்று குழுவிடம் முறையிடக் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இன்றைய தினம் ஒழுங்காற்று குழுவிடம் இரு தரப்பும் முக்கிய கருத்துகளை முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications