ராகுலால் தந்தையாக முடியாதாம்.. வாயால் சிக்கலில் சிக்கிய பாஜக தலைவர்.. ரூ.1 கோடியாமே.. என்னாச்சு?
ராகுல்காந்தி ரகசியமாக தடுப்பூசி செலுத்தினார். அவருக்கு குழந்தை பிறக்காது என்பதால் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை என கர்நாடக மாநில பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல் பேசினார்.
பெங்களூர்: கொரோனா தடுப்பூசி விஷயத்தில் தவறான கருத்துகளை கூறி ராகுல் காந்தி விளையாடினார். அதன்பிறகு இரவில் ராகுல்காந்தி ரகசியமாக தடுப்பூசி செலுத்திய நிலையில் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. ஏனென்றால் அவருக்கு குழந்தை பிறக்காது என கர்நாடகா பாஜக தலைவர் நளின் குமார் கட்டீல் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதற்கு கண்டனங்கள் குவிந்த நிலையில் இந்த பேச்சால் தற்போது நளின் குமார் கட்டீலை புதிய சிக்கலில் காங்கிரஸ் கட்சி மாட்ட வைத்துள்ளது.
கர்நாடகாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் கர்நாடகாவில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கு முன்பாகவே பிரசாரத்தை துவங்கி உள்ளன.
இந்த வேளையில் ஒவ்வொரு கட்சி தலைவர்கள் எதிர்தரப்பு மீது ஊழல், முறைகேடு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இந்த வேளையில் சில தலைவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட விஷயங்கள் குறித்து கூறும் கருத்துகள் சர்ச்சையாகி விடுகின்றன.

பாஜக மாநில தலைவர்
அந்த வகையில் தான் கர்நாடக மாநில பாஜக தலைவரான நளின் குமார் கட்டிலின் பேச்சுக்கள் அடிக்கடி சர்ச்சைகளை உருவாக்கி வருகிறது. திப்பு சுல்தான், ராகுல் காந்தி உள்ளிட்டவர்கள் பற்றி அவர் பேசியது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய எம்பியுமான ராகுல் காந்தி பற்றிய பேசியது சர்ச்சையை கிளப்பியது.

ராகுல் காந்தி பற்றி சர்ச்சை
அதாவது மார்ச் 5ல் ராமநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, ‛‛கொரோனா தடுப்பூசி விஷயத்தில் ராகுல் காந்தி, சித்தராமையா உள்ளிட்டவர்கள் தவறான கருத்துகளை தெரிவித்து விளையாடினர். தடுப்பூசி போட்டுகொண்டால் ஆண்மை குறைவு ஏற்பட்டு குழந்தை பிறக்காது என்றனர். ஆனால் அதே நாள் இரவில் ராகுல்காந்தி ரகசியமாக தடுப்பூசி செலுத்தியுள்ளார். இதனால் தான் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. ஏனென்றால் அவருக்கு குழந்தை பிறக்காது'' என கூறி சர்ச்சையை கிளப்பினார்.

வக்கீல் நோட்டீஸ்
நளின் குமார் கட்டீலின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது. இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நளின் குமார் கட்டீல் தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து அவர் பேசிய கருத்தை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் அவர் கேட்கவில்லை. இந்நிலையில் தான் கர்நாடகா இளைஞர் காங்கிரஸின் சட்டப்பிரிவு சார்பில் நளின்குமார் கட்டிலுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ரூ.1 கோடி கேட்கப்படும் என தகவல்
அதில்‛‛பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய தவறான கருத்தை வாபஸ் பெற்று நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் ராகுல் காந்தியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி ரூ.1 கோடி கட்சி சார்பில் இழப்பீடு கோரப்படும்'' என கூறப்பட்டுள்ளது.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications