திமுக உதவியை நாடிய கார்கே? கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சென்னையில் தங்க வைக்கத் திட்டம்?
பெங்களூரு: கர்நாடக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் பரபரப்பாக வெளியாகி கொண்டிருக்கும் சூழலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை சென்னையில் தங்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூருவில் தங்க வைப்பது குதிரை பேரத்துக்கு வழி வகுக்கும் என அஞ்சும் காங்கிரஸ் மேலிடம், இந்த விவகாரத்தில் திமுகவின் உதவியை நாடியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சென்னை அழைத்துவரப்பட்டால் ஈசிஆரில் உள்ள பிரபல ரிசார்ட்டில் தங்க வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் அவர்களை தனி விமானத்தில் சென்னை அழைத்து வருவதில் உள்ள சில நடைமுறைச் சிக்கல் காரணமாக பெங்களூருவில் உள்ள ஈகிள் டன் ரிசார்ட்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை பாஜகவின் குதிரை பேரத்திலிருந்து பாதுகாக்கும் பொறுப்பை டி.கே.சிவக்குமார் டீம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதனிடையே குமாரசாமியை சந்திக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பாஜக தலைவர்கள் கூட்டணி ஆட்சியை அமைக்கவும் தயாராக இருப்பதாக செய்திகள் வெளி வந்த வண்ணம் உள்ளன.
கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்றிரவோ அல்லது நாளை காலையோ சென்னை அழைத்து வரப்படுவார்கள் அல்லது பெங்களூருவில் உள்ள ஈகிள் டன் ரிசார்ட்டிலேயே தங்க வைக்கப்படுவார்கள் என்பது நமக்கு கிடைத்துள்ள தகவலாகும்.
கடந்த முறை கோவாவில் நூலிழையில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்ததால், கர்நாடக விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் மிகவும் கவனமுடன் காய் நகர்த்தி வருகிறது.
மொத்த 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 113 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் தற்போதைய நிலவரப்படி 119 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
-
டி.கே.சிவக்குமார் Vs சித்தராமையா.. சர்ப்ரைஸ் என்ட்ரியாக வரும் கார்கே.. கர்நாடகாவில் அரசியல் சுனாமி! -
தவெகவில் அதிமுக எம்எல்ஏக்கள்! போட்ட கண்டிஷன் என்னாச்சு? காங்கிரஸுக்கு ஸ்ரீநிதி கேள்வி -
தவெக பதவியேற்று 15 நாளானால் என்ன? இப்போதைக்கு விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா அதிரடி! -
கர்நாடகா: சிப்பி சேகரிக்க ஆற்றில் இறங்கியபோது நேர்ந்த துயரம்! பறிபோன 8 உயிர்கள்! பிரதமர் இரங்கல்! -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
23 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வி! தேர்தல் நிதியில் முறைகேடு? ஐவர் குழு அமைப்பு! வேட்பாளர்கள் ஷாக் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
சென்னையில் பச்சிளம் குழந்தை கடத்தல்.. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்! 5 மணி நேரத்தில் குற்றவாளி கைது!












Click it and Unblock the Notifications