சீனாவின் ஷாங்காய் பாணியில்.. பெங்களூரில் அமைகிறது "ஸ்கைடெக்.." நாட்டிலேயே உயரமான கட்டிடம்
பெங்களூர்: சீனாவில் ஷாங்காய் நாட்டில் உள்ள உயரமான டவர் பாணியில் பெங்களூரிலும் ஸ்கைடெக் கட்டிடம் அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நிதி ஆதாரம் மற்றும் இட தேர்வு ஆகியவற்றை தேர்வு செய்ய துணை முதல்வர் டிகே சிவக்குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவின் சிலிக்கான் வேலி என்ற பெருமையை கொண்ட நகரம் பெங்களூர். கர்நாடக மாநில தலைநகரான பெங்களூரில் ஏராளமான ஐடி நிறுவனங்கள் குவிந்துள்ளன. இதனால், நாட்டிலேயே அதிக வர்த்தகம் நடைபெறும் நகரங்களில் ஒன்றாகவும் உள்ள பெங்களூரில் டிராபிக் நெரிசலும் அளவுக்கதிகமாக இருக்கும். பெங்களூரில் உள்ள போக்குவரத்து நெரிசல் பற்றி அவ்வப்போது மீம்ஸ்களையும் நெட்டிசன்கள் போட்டு கலாய்ப்பது உண்டு.

நாட்டிலேயே போக்குவரத்து நெரிசல் உள்ள நகரங்களில் முதல் இடத்தையும் வகிக்கும் பெங்களுரில் அண்மையில் சுரங்கப்பாதை அமைப்பது குறித்த திட்டமும் அறிவிக்கப்பட்டது. இதற்காக டெண்டரும் விடப்பட்டது. இதில் 8 நிறுவனங்களும் கலந்து கொண்டன. இந்த நிறுவனங்கள் சுரங்கப்பாதை குறித்து ஆய்வறிக்கை அளிக்க உள்ளன. அதன்பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்.
வானுயர கோபுரம்: இந்த நிறுவனங்கள், சுரங்கப்பாதை 4 வழிப்பாதையாக அமைக்க வேண்டுமா? அல்லது 6 வழி பாதையாக அமைக்க வேண்டுமா?, எங்கு தொடங்கி எங்கு முடிக்க வேண்டும்? என்பது பற்றி ஆய்வு செய்யும். அதன்பிறகு இந்த திட்டத்தை பெங்களூர் நகர் முழுவதும் செயல்படுத்த வேண்டுமா? என்பது பற்றி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூர் நகரத்தை சர்வதேச தரத்திற்கு மாற்ற பல்வேறு நடவடிக்கைகளில் அம்மாநில துணை முதல்வரும் பெங்களூரு நகர மேம்பாட்டு துறை அமைச்சருமான டிகே சிவக்குமார் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் தற்போது, 250 மீட்டர் உயரத்திற்கு வானுயர கோபுரம் (Sky Deck) ஒன்றை கட்டி சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் திட்டத்தை முன்மொழிந்து இருக்கிறார். இந்த திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால் நாட்டிலேயே உயரமான viewing டவராக இது இருக்கும்.
கோபுரம் எப்படி இருக்கும்: இந்த திட்டம் தொடர்பாக அமைச்சர் டி.கே.சிவக்குமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. அதில், வானுயர கோபுரம் அமைப்பதற்கான நிதி ஆதாரம் மற்றும் நிலம் தேர்வு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பெங்களூர் நகரின் மைய இடத்தில் 8 முதல் 10 ஏக்கர் நிலத்தை அடையாளம் காண வேண்டும் என்று அதிகாரிகளுக்கு டிகே சிவக்குமார் உத்தரவிட்டார்.
ஆலமரத்தின் சாயலில் இந்த கோபுரம் அமைக்க திட்டமிட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்திலும் டிகே சிவக்குமார், கோபுரம் எப்படி இருக்கும் என்பது குறித்த மாதிரி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். வானுயர நிமிர்ந்து பிரமாண்டமாக இந்த டவர் காட்சி அளிக்கும் வகையிலான காட்சிகள் இதில் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது.
மாதிரி வீடியோ: உலக வடிவமைப்பு அமைப்புடன் (WDO) இணைந்து ஆஸ்திரியாவின் COOP HIMMELB(L)AU என்ற நிறுவனத்தின் யோசனையுடன் இது உருவாக்கப்பட்டதாகவும் பதிவிட்டுள்ளார். டிகே சிவக்குமார் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், உயரமான இந்த டவர் எப்படி தோற்றமளிக்கும் என்பது குறித்த தத்ரூபமான காட்சிகள் இடம் பெற்றுள்ளன. வானுயர கம்பீரமாக தெரியும் இந்த டவர் இரவு நேரத்திலும் கண்ணைக்கவரும் விதமாக தெரியும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம் பெற்று நெட்டிசன்களை வியக்க வைக்கும் படியாக அமைந்துள்ளது.
என்னென்ன இடக்கள் இருக்கும்: இந்த ஸ்கை டவரில் இருந்து பெங்களூர் நகரத்தின் மொத்த அழகையும் பார்வையாளர்கள் ரசிக்க முடியும். அது மட்டும் இன்றி இந்த டவரில் பல்வேறு எண்டெர்டெயின்மெண்ட் இடங்கள், சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு இடங்கள், ஷாப்பிங் பகுதிகள், உணவு விடுதிகள், தியேட்டர்கள், ஸ்கை கார்டன், ரோலர் காஸ்டர், விஐபிகளுக்கான இடங்கள், பார்கள் உள்ளிட்டவையும் இடம் பெறும் என்று தகவல்கள் கூறுகின்றன.
பொதுமக்களுக்கு மிகச்சிறந்த பொழுதுபோக்கு இடமாக இந்த ஸ்கை டவர் இருக்கும் எனவும் பெங்களூர் நகர மேம்பாட்டு திட்ட அதிகாரிகள் கூறினர். அதுமட்டும் இன்றி கட்டிடத்தின் வடிவமைப்பும் தத்ரூபமாக ஆலமரத்தை பிரதிபலிக்கும் வகையிலேயே இருக்கும் எனவும் தகவல்கள் கூறுகின்றன. அதுமட்டும் இன்றி கட்டிடத்தின் மேல் பகுதியில் சோலார் பேனல்கள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டு அதன் மூலம் மின்சக்தி பெறப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
ஷாங்காய் கோபுரம்: சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள கோபுரம் உலகின் இரண்டாவது உயரமான கட்டிடமாக உள்ளது. இந்த கட்டிடத்தின் உயரம் 632 மீட்டர் ஆகும். 128 மாடிகளை கொண்ட இந்த கட்டிடம் கடந்த 2015 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. இதை அடிப்படையாக கொண்டுதான், இந்தியாவிலேயே உயரமான கட்டிடமாக அமைக்க கர்நாடகா திட்டமிட்டு இருக்கிறது.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications