Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்நாடகா: பாஜக வென்றால் முதல்வர் பதவி யாருக்கு? சர்ச்சை எம்எல்ஏ டூ மத்திய அமைச்சர் வரை! முழு லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்து முடிந்தது. நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பாஜக ஆட்சியை பிடித்தால் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான் பாஜகவில் முதல்வர் பதவிக்கு காய்நகர்த்தும் தலைவர்கள் பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. இதில் சர்ச்சை எம்எல்ஏ முதல் மத்திய அமைச்சர்கள் வரை இடம்பெற்றுள்ளனர்.

கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்து முடிந்தது. 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடந்தது. நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது. நாளை மாலையில் கர்நாடகாவில் எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது உறுதியாகி விடும்.

Karnataka Election Result: If BJP Wins the polls who will become CM from BJP, full list here

கர்நாடகாவை பொறுத்தமட்டில் 113 தொகுதிகளில் வென்றால் மட்டுமே ஒரு கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியும். தேர்தலுக்கு பிந்தைய இந்தியா டுடே, சி வோட்டர் -ஆக்சிஸ் கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளன. மாறாக பிற கருத்து கணிப்புகள் தொங்கு சட்டசபை அமையும் என தெரிவித்துள்ளன.

ஒருவேளை காங்கிரஸ், பாஜக கட்சிகள் தணித்து 113 இடங்களில் வெற்றி பெறாவிட்டால் ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடிக்க முயற்சிக்கலாம். இந்த கூட்டணி அமைந்தால் ஜேடிஎஸ் கட்சியின் குமாரசாமி முதல்வர் பதவியை விட்டு கொடுக்க மறுப்பார். தானே முதல்வராக இருப்பேன் என அடம்பிடிப்பார். இதற்கிடையே தான் காங்கிரஸ், பாஜகவினர் கருத்து கணிப்புகள் மீது நம்பிக்கை இல்லை எனவும், தங்கள் கட்சி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளன.

ஒருவேளை கருத்து கணிப்புகளை தாண்டி கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைத்தால் முதல்வர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வியோடு, பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் தான் முதல்வர் பதவியை அலங்கரிக்க சில தலைவர்களின் பெயர்கள் முன்னிலையில் உள்ளன.

இதில் முதல் பெயர் பசவராஜ் பொம்மை. தற்போது முதல்வராக இவர் இருக்கிறார். லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பது பிளஸ் பாயிண்டாக உள்ளது. மாறாக இவரது ஆட்சியில் முறைகேடு, ஊழல் புகார்கள் எழுந்தன. இது அவருக்கு மைனஸாக இருக்கிறது. இருப்பினும் லிங்காயத் சமுதாயம் தான் கர்நாடகாவில் பாஜகவுக்கு மிகப்பெரிய ஓட்டு வங்கியாக இருக்கிறது. இதனால் இவரை மீண்டும் அதாவது அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் வரை முதல்வராக்க பாஜக முடிவு செய்யலாம்.

இதற்கு அடுத்தப்படியாக 2வது இடத்தில் பாஜகவின் மூத்த தலைவரும், மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சருமான பிரகலாத் ஜோஷியின் பெயர் இருக்கிறது. இவர் பிராமணர் வகுப்பை சேர்ந்த இவர் தார்வார் நாடாளுமன்ற தொகுதியில் 4வது முறையாக எம்பியாக உள்ளார். கர்நாடகாவில் செல்வாக்கு பெற்ற தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த அனந்தகுமார் மறைவுக்கு பிறகு பிரகலாத் ஜோஷி பாஜக மேலிடத்துடன் நெருக்கமானார். இதனால் அவரது பெயரும் முதல்வர் பதவிக்கான பரிந்துரையில் இருக்கிறது. ஆனால் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவரை தவிர்த்து பிரகலாத் ஜோஷிக்கு முதல்வர் பதவி வழங்கினால் அது 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பின்னைடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இது பிரகலாத் ஜோஷி முதல்வர் இருக்கையை நெருங்குவதில் சிக்கலை ஏற்படுத்தும்.

இதுதவிர லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த முருகேஷ் நிராணி, பசனகவுடா பட்டீல் எத்னால், ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்த சிடி ரவி, அஸ்வத் நாராயணன், ஆர் அசோக் உள்ளிட்டவர்களும் முதல்வர் பதவியை பெற முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதில் முருகேஷ் நிராணி தற்பாது தொழில்துறை அமைச்சராக உள்ளார். இவர் எடியூரப்பாவுக்கு மிகவும் நெருக்கமானவர். மேலும் பாகல்கோட்டை மாவட்டம் பீலகி தொகுதியில் 2004, 2008, 2018 ஆகிய தேர்தல்களில் வெற்றி பெற்று மீண்டும் தற்போது அங்கு போட்டியிட்டுள்ளார்.

அதேபோல் லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்த பசனகவுடா பட்டீல் விஜயாப்புரா தொகுதி சிட்டிங் எம்எல்ஏவாக உள்ளார். இவர் மத்திய இணையமைச்சராக இருந்த அனுபவம் கொண்டவர். இருப்பினும் பலமுறை கட்சி மாறியது. பாஜக மேலிடத்துக்கு எதிராக பேசியது மற்றும் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கிய வரலாற்றை இவர் கொண்டுள்ளார். அதோடு எடியூரப்பாவுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த இவர் சமீபத்தில் அவரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் தான் பசனகவுடா பட்டீலும் முதல்வர் பதவி மீது குறிவைத்து காய்நகர்த்தி வருகிறார்.

Karnataka Election Result: If BJP Wins the polls who will become CM from BJP, full list here

மாறாக லிங்காயத் சமுதாயத்தினரை தாண்டி ஒக்கலிகர் சமுதாயத்தினருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என பாஜக நினைத்தால் சிக்கமகளூர் எம்எல்ஏ சிடி ரவி(தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர்) மற்றும் பெங்களூர் மல்லேஸ்வரம் தொகுதி சிட்டிங் எம்எல்ஏவும், அமைச்சருமான அஸ்வத் நாராயணன், பெங்களூர் பத்மநாபநகர் தொகுதி எம்எல்ஏவும் அமைச்சருமான அசோக்கிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஏனென்றால் ஒக்கலிகர் சமுதாய ஓட்டுகள் ஜேடிஎஸ், காங்கிரஸ் கட்சிக்கு தான் கிடைக்கிறது. இதனால் தான் பழைய மைசூர் மாவட்டங்களில் பாஜக செல்வாக்கு இல்லாத நிலையில் உள்ளது. இந்நிலையில் தான் ஒக்கலிகர் சமுதாய ஓட்டுக்களை 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வசப்படுத்த இந்த யுக்தியை கையாள வாய்ப்புள்ளது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் பாஜகவின் முகமாக உள்ள எடியூரப்பாவின் மகன் விஜயேந்திராவுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.

இருப்பினும் கூட பாஜகவின் முதல்வர் யார்? என்பதை நாம் உறுதியாக சொல்லிவிட முடியாது. ஏனென்றால் முதலில் தேர்தல் முடிவு பாஜகவுக்கு சாதகமாக வர வேண்டும். அதன்பிறகு கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் குறிப்பிட்ட நபரை முதல்வராக்க ஒப்புதல் பெற வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் தேவை என்பதால் பாஜகவின் முதல்வர் யார்? என்பதை நாம் உறுதியாக கூறிவிட முடியாது. அதனை அறிய நாம் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+