Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிஎம் பசவராஜ் பொம்மை என் ‛மாமா’ தான்.. உரிமையாய் சொன்ன சுதீப்.. பின்னணியில் இப்படியொரு காரணமா?ஆஹா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ள நிலையில் முன்னணி நடிகரான கிச்சா சுதீப் தற்போதைய பாஜக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பிரஸ்மீட்டில் நடிகர் சுதீப், பசவராஜ் பொம்மையை உரிமையோடு ‛‛மாமா'' என்ற முறையை கூறி அழைத்தார். இதையடுத்து இருவரும் உறவினர்களா? என பலரும் இணையதளங்களில் தேட தொடங்கி உள்ள நிலையில் இருவருக்கும் இடையேயான உறவு பற்றிய விபரம் தற்போது வெளியாகி உள்ளது.

கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். 2018 ல் கர்நாடகாவுக்கு சட்டசபை தேர்தல் நடந்த நிலையில் மே மாதம் 24ம் தேதியுடன் 5 ஆண்டு ஆட்சி முடிவுக்கு வருகிறது. இதனால் கர்நாடகா சட்டசபை தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் தேதி அறிவித்துள்ளது.

அதன்படி கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. ஓட்டு எண்ணிக்கை மே 13ல் நடக்கிறது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் தனித்து ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்றால் ஒரு கட்சி 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

Karnataka Election: Why actor Kiccha Sudeep calls CM Basavaraj bommai as Mama, both are relatives?

பாஜகவுக்கு சுதீப் ஆதரவு : கர்நாடகாவை பொறுத்தமட்டில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஜேடிஎஸ், ஆம்ஆத்மி கட்சிகள் இடையே நான்குமுனை போட்டி நிலவுகிறது. இதுதவிர ஓவைசி கட்சி, எஸ்டிபிஐ உள்பட பல கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. பாஜகவை பொறுத்தமட்டில் ஆட்சியை தக்க வைக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சி இழந்த ஆட்சியை பிடிக்க முனைப்பு காட்டி வருகிறது. ஒருவேளை பாஜக, காங்கிரஸ் கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் ஜேடிஎஸ் கட்சி கிங்மேக்கராக மாற வாய்ப்புள்ளது.

பெரும்பாலான கருத்து கணிப்புகள் காங்கிரசுக்கு சாதகமாக உள்ளன. இதனால் பாஜக மாநிலத்தில் பிரபலமானவர்களின் ஆதரவுகளை பெற முயன்று வருகிறது. இதனால் கர்நாடகா அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் கன்னட சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் சுதீப் நேற்று முதல்வர் பசவராஜ் பொம்மையுடன் சேர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது நடிகர் சுதீப்,நான் முதல்வர் பசவராஜ் பொம்மையை ஆதரிக்கிறேன் என தெரிவித்தார். இதன்மூலம் பசவராஜ் பொம்மை பாஜகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.

‛மாமா' என உரிமையோடு அழைத்த சுதீப் : இந்த பிரஸ்மீட்டில் நடிகர் சுதீப் பேசுகையில், ‛‛எனது ஆதரவை முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு வழங்குவதற்காக இங்கு நான் வந்துள்ளேன். அவர் மீது கொண்ட மரியாதை காரணமாக அவரை மாமா என்ற உறவு முறை கூறி அழைத்து வருகிறேன். எனது கஷ்டகாலத்தில் மாமா பசவராஜ் பொம்மை எனக்கு ஆதரவாக இருந்துள்ளார். துவக்க காலத்தில் என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தா்.

சட்டசபை தேர்தலில் பசவராஜ் பொம்மை மற்றும் அவரது ஆதரவு கோரும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன். ஆனால் நான் பாஜகவில் இணையவில்லை. மேலும் தேர்தலிலும் போட்டியிட மாட்டேன்'' என்றார். நடிகர் சுதீப்புக்கு மாநிலம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இது பாஜகவுக்கு கைக்கொடுக்கலாம் என கூறப்படுகிறது.

காரணம் என்ன?

இந்நிலையில் தான் நடிகர் சுதீப், முதல்வர் பசவராஜ் பொம்மையை மாமா என உரிமையோடு அழைத்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த பலரும், பசவராஜ் பொம்மை, நடிகர் சுதீப் உறவினர்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு விடை என்னவென்றால் நடிகர் பசவராஜ் பொம்மை, நடிகர் சுதீப் ஆகியோர் உறவினர்கள் இல்லை என்பது தான். இருப்பினும் இருவரின் குடும்பத்தினருக்கும் இடையே நெருங்கிய பந்தம் உள்ளது.

நடிகர் சுதீப் தனது துவக்க காலத்தில் சினிமாவில் ஜொலிக்க சிரமப்பட்டு பிரச்சனைகளை சந்தித்தார். இந்த வேளையில் அவருக்கு சில அரசியல்வாதிகள் பக்கபலமாக இருந்தனர். அதில் ஒருவர் தான் பசவராஜ் பொம்மை.அன்று முதல் இன்று வரை பசவராஜ் பொம்மை-நடிகர் சுதீப் இடையே நல்ல உறவு இருந்து வருகிறது. இந்த பந்தம் காரணமாக தான் தன்னை விட வயது முதிர்ந்த பசவராஜ் பொம்மையை, நடிகர் சுதீப் ‛மாமா' என்ற உறவு முறையோடு கூறியுள்ளார்.

விளக்கம் கொடுத்த சுதீப் : மேலும் நடிகர் சுதீப் தனக்கும், பசவராஜ் பொம்மைக்கும் இடையேயான உறவை பிரஸ்மீட்டிலேயே குறிப்பிட்டு இருந்தார். இதுபற்றி சுதீப், ‛‛ நான் திரையுலகில் நுழைந்தபோது எனக்கு காட்பாதர் யாரும் இல்லை. துவக்கத்தில் கடினமான நாட்களை சந்தித்தேன். அப்போது எனக்கு உறுதுணையாக ஏராளமானவர்கள் வந்தனர்.

அதில் ஒருவர் தான் பசவராஜ் பொம்மை மாமா. அவர் அரசியலில் நுழைந்த போது நான் திரையுலகில் என்ட்ரி ஆனேன். அவர் எனக்கு மிகவும் முக்கியமானவர். தற்போது நான் எடுத்துள்ள இந்த முடிவு என்பது பசவராஜ் பொம்மை மாமா மீது நான் வைத்திருக்கும் அன்பு மற்றும் நன்றியின் வெளிப்பாடாகும்அப்போதிருந்து நான் அவரை அறிந்திருக்கிறேன், அவருக்கு எனது ஆதரவை வழங்க விரும்புகிறேன் என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+