அரிசி தர மறுத்த மத்திய அரசுக்கு சித்தராமையா "வேற மாதிரி" பதிலடி.. மக்கள் ஹேப்பி!
பெங்களூர்: கர்நாடகாவில் மத்திய அரசு மறுத்ததால் இலவச அரிசி திட்டத்தை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அரிசிக்கு பதிலாக பதிலடியாக ஒரு திட்டத்தை கையில் எடுத்துள்ளது சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு.
கர்நாடகாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பொறுப்பேற்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற அக்கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதியும் பிரதானமாக கருதப்பட்டது. இதனால் காங்கிரஸ் ஆட்சி அமைந்தததும் மகளிருக்கு இலவச பயணம், 200 யூனிட் வரை இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றியது.
அந்த வரிசையில் கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்தால் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. இந்த திட்டத்தை ஜூலை 1-ம் தேதி தொடங்குவதாக சித்தராமையா கூறினார். இந்த திட்டத்தை நிறைவேற்ற தேவையான கூடுதல் அரிசியை வழங்குமாறு இந்திய உணவு கழகத்துக்கு சித்தராமையா கடிதம் எழுதினார்.

இதற்கு முதலில் சம்மதம் தெரிவித்த உணவு கழகம் பின்னர் வெளிச் சந்தையில் அரிசி வழங்குவதை நிறுத்துவதாக கூறியது. இது கர்நாடகாவில் ஆளும் சித்தாரமையா அரசுக்கு அதிருப்தியை அளித்தது. பஞ்சாப், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து அரிசியை கொள்முதல் செய்யவும் சித்தராமையா பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அதிலும் சாதகமான முடிவு எட்டவில்லை. தற்போது கர்நாடகாவில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு 5 கிலோ இலவச அரிசி ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, மீதம் வழங்க வேண்டிய 5 கிலோ இலவச அரிசிக்குப் பதிலாக பணமாக வழங்க முடிவு கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. ஒரு கிலோவிற்கு 34 ரூபாய் வீதம், 170 ரூபாய் வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. வரும் ஜூலை 1ம் தேதி முதல் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள கர்நாடக அரசு இது தற்காலிக ஏற்பாடு மட்டுமே எனவும் தெரிவித்துள்ளது.
கர்நாடக உள்துறை அமைச்சர் முனியப்பா இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அரிசி கொள்முதல் செய்ய பல்வேறு வழிகளில் முயற்சி மேற்கொண்டோம். ஆனால், அரிசியை பெற முடியவில்லை. எனவே எங்கள் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில, மாற்று தீர்வை நாங்கள் கையாண்டுள்ளோம். எனினும், மக்களுக்காக ரொக்கமாக அளிப்பதால் ஏற்படும் நிதி சிக்கல்கள் குறித்து நாங்கள் கணக்கெடுக்கவில்லை" என்றார்.
கர்நாடகாவில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தான் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கர்நாடாக சட்டம் மற்றும் பார்லிமென்ட்ரி விவகாரங்கள் துறை அமைச்சர் எச்.கே பாடீல் கூறியதாவது:- இந்திய உணவு கழகம் மூலமாக மத்திய அரசு இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு வந்தது. அரிசி வினியோகம் சீராக கிடைக்கும் வரை ரொக்கமாக பணம் வழங்க முடிவு செய்துள்ளோம். மக்களுக்கு நேரடியாக வங்கியில் இந்த பணம் வரவு வைக்கப்படும்" என்றார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications