கர்நாடகாவில் ஊரடங்கு தளர்வு இல்லை.. ஊரடங்கை தளர்த்த அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பால் முடிவு
பெங்களூரு: கர்நாடகாவில் ஊரடங்கை தளர்வு செய்ய அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் அம்மாநில அரசு ஊரடங்கை தளர்த்துவதை திரும்ப பெற்றுள்ளது.
Recommended Video
கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் சீரான வேகத்தில் அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் தற்போது 384 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 14 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 104 பேர் குணம் அடைந்துள்ளனர். 285 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களை ஒப்பிடும் போது கர்நாடாகவில் பாதிப்பு மிகவும் குறைவு தான். இருப்பினும் அம்மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை தளர்த்தக்கூடாது என்று எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்தியாவின் சிலிக்கான் வேலி என்ற அழைக்கப்படும் பெங்களூருவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பல லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனங்களுக்கும் தலைமை அலுவலகங்கள் எல்லோமே பெங்களூருவில் தான் இருக்கின்றன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவோர்களை மே 3ம் தேதி வரை வீட்டில் இருந்தே வேலை செய்யுமாறு கர்நாடாக அரசு அறிவுறத்தி உள்ளது.
இதேபோல் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அலுவலங்களை இயக்குவதை மறுபரிசீலனை செய்யவும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி ஆலோசிக்க இன்று அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் எடியூரப்பா அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் ஊரடங்கு விவகாரம் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இதற்கிடையே கர்நாடகாவில் ஊரடங்கை தளர்வு செய்ய அம்மாநிலத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் அம்மாநில அரசு ஊரடங்கை தளர்த்துவதை திரும்ப பெற்றுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications