பெங்களூரின் 3 லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் எப்போது? கர்நாடகாவில் 2 கட்டமாக தேர்தல் அறிவிப்பு
பெங்களூர்: கர்நாடகாவில் 2 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரில் உள்ள 3 லோக்சபா தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கும் தேதி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்தார். அப்போது லோக்சபா தேர்தல் தேதிகளை அவர் அறிவித்தார். மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தமட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வரும் ஏப்ரல் 19 ம் தேதி ஒரே கட்டமாக மொத்தமுள்ள 39 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கும் வரும் 19 ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
ஆனால் கர்நாடகாவில் லோக்சபா தேர்தல் என்பது 2 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. கர்நாடகாவில் 2 கட்டமாக லோக்சபா தேர்தல் நடப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 2019ம் ஆண்டும் 2 கட்டங்களாக தான் லோக்சபா தேர்தல் நடந்தது. அதன்படி இப்போது முதற்கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் மே மாதம் 7 ம் தேதியும் நடைபெற உள்ளது.
ஏப்ரல் 26ம் தேதி மொத்தம் 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. உடுப்பி - சிக்கமகளூர், ஹாசன், தட்சின கன்னடா, சித்ரதுர்கா, தும்கூர், மண்டியா, மைசூர், சாமராஜநகர், பெங்களூர் புறநகர், பெங்களூர் வடக்கு, பெங்களூர் மத்தியம், பெங்களூர் தெற்கு, சிக்பள்ளாப்பூர், கோலார் ஆகிய தொகுதிகளுக்கு ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடக்கிறது.
அதன்பிறகு மே மாதம் 7 ம் தேதி மீதமுள்ள 14 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. சிக்கோடி, பெலகாவி, பாகல்கோட்டை, பிஜாப்பூர், , குல்பர்கா, ராய்ச்சூர், பீதர், கொப்பல், பல்லாரி, ஹாவேரி, தார்வார், உத்தர கன்னடா, தாவணகெரோ, சிவமொக்கா ஆகிய 14 தொகுதிகளுக்கு 2 வது கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தல்களில் பதிவாகும் ஓட்டுகள் மொத்தமாக ஜுன் 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. கர்நாடகாவை பொறுத்தவரை அங்கு தற்போது காங்கிரஸ் ஆளும் கட்சியாக உள்ளது. வரும் தேர்தலில் காங்கிரஸ் தனித்து களமிறங்கும் நிலையில் பாஜகவும், ஜேடிஎஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் 25 இடங்களில் பாஜக வென்றது. காங்கிரஸ், ஜேடிஎஸ் கட்சிகள் தலா ஒரு இடங்களில் வென்றன. மண்டியாவில் சுயேச்சையாக போட்டியிட்ட நடிகர் அம்பரீசின் மனைவி சுமலதா வெற்றி பெற்றார். இந்நிலையில் தான் வரும் தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற முனைப்பு காட்டி வருகிறது. அதேபோல் மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளையும் கைப்பற்ற பாஜகவும், ஜேடிஎஸ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications