• search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

இளம் பெண்ணுடன் கெஸ்ட் ஹவுசில்.. கர்நாடக அமைச்சரின் "ச்சீச்சீ" வீடியோ.. 5 மாநில "தேர்தலால்" ராஜினாமா

|

பெங்களூர் : இளம்பெண்ணுடன் கர்நாடக அரசு விருந்தினர் மாளிகையில் உல்லாசமாக இருந்துள்ளார் அம்மாநில நீர் வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோலி.

  கர்நாடக அமைச்சரின் கசமுச படம்… போராட்ட களத்தில் குதித்த காங்கிரசார்!

  வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றி அந்த இளம் பெண்ணுடன் இவ்வாறு அவர் நடந்து கொண்ட நிலையில் அந்த சம்பவம் பற்றிய வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  9 மணி நேரம் ஜம்முனு தூங்குணா ரூ. 10 லட்சம் பரிசு.. இது கனவு இல்ல பாஸ்.. நிஜம் தான்!

  பலாத்காரத்துக்கு உள்ளான அந்தப் பெண் இந்த வீடியோ காட்சிகளை எப்படியோ பதிவு செய்து உள்ளார். இது தெரிந்ததும் அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோலி அந்த பெண்ணை மிரட்ட ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

  வெளியான வீடியோ

  இந்த நிலையில்தான் அந்த வீடியோ காட்சிகளை, சமூக ஆர்வலர் தினேஷ் கள்ளஹல்லி மீடியா சேனல்களுக்கு வெளியிட்டுள்ளார். மேலும், பெங்களூரு நகரின் கப்பன் பார்க் காவல் நிலையத்தில் அமைச்சருக்கு எதிராக புகார் பதிவு செய்தார். இதுபற்றி தினேஷ் கள்ளஹல்லி நிருபர்களிடம் கூறியதாவது: பாதிக்கப்பட்ட இளம்பெண் வயதில் மிகவும் குறைந்தவர். வட கர்நாடகா பகுதியை சேர்ந்தவர். சமீபத்தில் அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோலியை சந்தித்துள்ளார்.

  வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை

  வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை

  வட கர்நாடகாவில் உள்ள அணைக்கட்டுகள் தொடர்பாக ஒரு டாக்குமென்டரி தயாரிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார். அவரது அழகில் மயங்கிய ரமேஷ் ஜார்கிகோலி, ஆசை வார்த்தை கூறி அவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட திட்டமிட்டார். கர்நாடக மின்சாரத் துறையில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி டெல்லியில் உள்ள கர்நாடக மாநில அரசின் விருந்தினர் மாளிகைக்கு இளம் பெண்ணை அழைத்துச் சென்று அங்குள்ள அறையில் உல்லாசமாக இருந்துள்ளார். இப்போது அந்த பெண்ணை அமைச்சர் மிரட்டுவதால் அவர் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன்.

  போலீஸ் கமிஷனரை சந்தித்து இதுபற்றி தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  ராஜினாமா கிடையாது

  ராஜினாமா கிடையாது

  இந்த வீடியோ புயலை கிளப்பிய நிலையில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோலி, தனக்கு எதிராக யாரோ ஒருவர் சென்று புகார் கொடுத்துள்ளதன் பின்னணியில் அரசியல் சதி திட்டம் இருக்கிறது. நான் நிரபராதி என்று நிரூபித்து காட்டுவேன். அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் கூறுகையில் இது தனிப்பட்ட விஷயம் போல இருக்கிறது. முறையாக விசாரித்து விட்டு பதில் சொல்கிறோம் என்று தெரிவித்துவிட்டார்.

   கட்சி மாறி அமைச்சரானவர்

  கட்சி மாறி அமைச்சரானவர்

  ரமேஷ் ஜார்கிகோலி பெல்காம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அங்கு அவருக்கு மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு இருக்கிறது. குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த போது 17 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தனர். அதில் ஒருவர் ரமேஷ் ஜார்கிகோலி. பெல்காம் காங்கிரசின் முக்கிய பிரமுகராக இருந்த அவர் பாஜகவில் சேர்ந்து எடியூரப்பா அரசில் அமைச்சர் பதவி பெற்றார். இப்படி கட்சி தாவி குட்டிகரணம் அடித்து பெற்ற பதவி.. இன்று ஒரு பெண் பிரச்சினையால் பறிபோயுள்ளது.

  5 மாநில தேர்தலால் ராஜினாமா

  5 மாநில தேர்தலால் ராஜினாமா

  ஆம்.. முதல்வர் எடியூரப்பாவிடம், ரமேஷ் ஜார்கிகோலி ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். அதில், நான் குற்றமற்றவன். இருந்தாலும், நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். குற்றமற்றவன் என்று நிரூபித்து விட்டு மீண்டும் பதவிக்கு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் என்னுடைய பிரச்சனை காரணமாக பாஜக கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டு விடக்கூடாது. எனவே,ராஜினாமா செய்கிறேன் என எடியூரப்பாவிடம் அமைச்சர் கூறியதாக கன்னட மீடியாக்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. அனேகமாக 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவடைந்த பிறகு அமைச்சரவையில் ரமேஷ் ஜார்கிகோலியை எடியூரப்பா சேர்த்துக் கொள்வார் என்று கர்நாடக அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

  எடியூரப்பாவையும் விட்டு வைக்கவில்லை

  எடியூரப்பாவையும் விட்டு வைக்கவில்லை

  அந்த ஆபாச சிடியில் அமைச்சர் அந்த இளம் பெண்ணுடன் உரையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எடியூரப்பா நிறைய ஊழல் செய்தவர் என்று கூட அதில் அவர் கேவலமாக பேசுகிறார். பெல்காம் மாவட்ட மக்களை உயர்வாகவும், கன்னடர்களை இழிவாகவும் பேசும் காட்சிகள் கூட அதில் இடம்பெற்றுள்ளன. மேலும், அந்த இளம்பெண் சத்தமாக பேசும் போது.. "அப்படி பேசாதே.. இது அரசு விருந்தினர் மாளிகை, வெளியே உள்ளவர்களுக்கு கேட்டு விடும்.." என்றும் அமைச்சர் கூறும் ஆடியோ பதிவும் அந்த வீடியோவில் இருக்கிறது. இப்படி இருந்தும்கூட அமைச்சர் ரமேஷ் ஜார்கிகோலி ஆதரவாளர்கள், அவர் ராஜினாமா செய்ததை அறிந்து பெல்காம் மாவட்டத்தில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

   
   
   
  English summary
  Karnataka's Minister of Water Resources Ramesh Jarkiholi resigns after a CD leaked by activist Dinesh Kallahalli to TV news channels on Tuesday which allegedly showed minister in a compromising position with a woman.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X