Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தப்பினார் சித்தராமையா.. ஆனா எடியூரப்பாவுக்கு கெட்ட செய்தி.. ஒரே நாளில் வந்த இரு முக்கிய உத்தரவுகள்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மற்றும் இந்நாள் முதல்வர் சித்தராமையா ஆகியோர் குறித்த இரு முக்கிய வழக்குகளில் இன்று தீர்ப்பு வந்துள்ளது. அதில் சித்தராமையா வழக்கில் அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்துள்ள நிலையில், எடியூரப்பாவுக்கு எதிரான போக்சோ வழக்கு அவருக்குத் தலைவலியைக் கொடுப்பதாக மாறியுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.

நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் இரு முக்கிய அரசியல் தலைவர்கள் தொடர்புடைய வழக்கில் இன்று முக்கிய தீர்ப்புகள் வந்துள்ளன. இந்த இரு தீர்ப்புகளின் பின்னணி மற்றும் முக்கியத்துவம் குறித்து நாம் பார்க்கலாம்.

karnataka siddaramaiah yediyurappa

எடியூரப்பா:

கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான பி.எஸ்.எடியூரப்பாவுக்கு எதிராகக் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் பெண் ஒருவர் பாலியல் புகாரை அளித்திருந்தார். அதாவது உதவி கேட்கச் சென்ற போது, தனது மைனர் மகளைத் தனி அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தாக புகாரளித்திருந்தார். இது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே தனக்கு எதிரான போக்சோ வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். எடியூரப்பாவின் இந்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

சிக்கல்:

கடந்த சில மாதங்களாகவே இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்த சூழலில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததால் மனு மீதான தீர்ப்பைக் கடந்த வாரம் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்தச் சூழலில் தான் எடியூரப்பாவின் இந்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இது எடியூரப்பாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துவதாக உள்ளது.

வழக்கின் பின்னணி:

கடந்தாண்டு 54 வயது பெண் ஒருவர், எடியூரப்பாவுக்கு எதிராக பாலியல் புகாரை அளித்திருந்தார். கடந்தாண்டு பிப்ரவரி மாதம் தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த சிறுமியின் தாய் புகார் அளித்தார். அதாவது வழக்கு உதவி கேட்டுச் சென்றிருந்த போது, மகளைத் தனியாக அழைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக எடியூரப்பா மீது புகார் அளித்திருந்தார். அப்போதே எடியூரப்பாவிடம் இது குறித்துக் கேட்டதாகவும் அப்போது சமாளிக்கும் விதமாக அவர் பதிலளித்துச் சென்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், முதலில் எடியூரப்பாவுக்கு எதிராகப் புகார் அளிக்கப் பயமாக இருந்ததாலேயே புகார் அளிக்கவில்லை என்றும், இருப்பினும் தனது மகளுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே தற்போது புகார் அளித்திருந்ததாகவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். சிறுமியின் சார்பில் தாயார் புகாரளித்திருந்தார். அவருக்கு வயது 54. கடந்த மே மாதம் தான் அவர் நுரையீரல் புற்றுநோயால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

முடா வழக்கு- சித்தராமையா:

மறுபுறம் முடா வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வந்துள்ளது. முடா எனப்படும் மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு வாரியம் அம்மாநில முதல்வர் சித்தராமையாவின் மனைவிக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கீடு செய்திருந்த நிலையில், அதில் ஊழல் நடந்ததாகப் புகார் எழுந்தது. இந்த வழக்கை லோக் ஆயுக்தா போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இருப்பினும், வழக்கு விசாரணையை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக்கோரி கர்நாடக ஐகோர்ட்டில் சினேகமாயி கிருஷ்ணா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.. இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நீதிபதி இன்று தீர்ப்பளித்தார். அதில், "வழக்கின் விசாரணை ஆவணங்களைப் பார்க்கும்போது, அது தவறான பாதையில் செல்வதாகவோ, அல்லது வெறுமன பெயருக்கு மட்டும் நடத்தப்பட்ட தரமற்ற விசாரணையாகவோ தெரியவில்லை. எனவே சிபிஐ விசாரணை தேவையில்லை" என்று குறிப்பிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+