ஒற்றுமையாக இருக்கோம்..யார் முதுகிலும் குத்தமாட்டேன்..மிரட்ட மாட்டேன்...சொல்வது டி.கே சிவகுமார்
பெங்களூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்றும் முதல்வர் பதவி விசயத்தில் அதிருப்தியும் மன வருத்தமும் இருந்தாலும் முதுகில் குத்தமாட்டேன் என்றும் டி.கே.சிவகுமார் கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தில் முதல்வர் அரியணையில் அமரப்போவது யார் என்பதில் சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் இடையே நீயா நானா போட்டி ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதியில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 66 இடங்களிலும், மஜத 19 இடங்களில் வெற்றி பெற்றன.

காங்கிரஸ் கட்சியில் முதல்வர் பதவிக்கான மல்லுக்கட்டு ஆரம்பித்து விட்டது. இந்த நிலையில் கர்நாடகாவின் முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதற்காக நேற்று பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான சுஷில்குமார் ஷிண்டே, தீபக் பவாரியா, பன்வார் ஜிதேந்திர சிங் தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது.
கர்நாடக முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை தலைமைக்கு வழங்கி கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கர்நாடக முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே போட்டி நிலவி வருகிறது.
இரு தலைவர்களின் ஆதரவாளர்களும் தங்கள் தலைவர்தான் அடுத்த முதல்வர் என்று போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். இது கர்நாடகாவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்நிலையில் எம்.எல்.ஏக்கள் அனுப்பி வைத்த தீர்மான அறிக்கையின் அடிப்படையில் யார் முதல்வர் என்று தேர்ந்தெடுக்கப்படும் ஆலோசனையில் காங்கிரஸ் தலைமை உள்ளது. இதனையடுத்து இருவரையும் சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைமை டெல்லிக்கு அழைத்தது.

கர்நாடகாவில் முதல்வர் அரியணை யாருக்கு என்ற போட்டிக்கு இடையே சித்தராமையா டெல்லி சென்றுள்ளார். அங்கு தலைவர்களை சந்தித்து பேசியுள்ளார். பெரும்பான்மை எம்எல்ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக நம்பிக்கையுடன் கூறியுள்ளார் சித்தராமையா. நேற்று தனது டெல்லி பயணத்தை ரத்து செய்தார் டி.கே. சிவகுமார்.
இதனிடையே கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவகுமார் இன்று டெல்லி சென்றுள்ளார். அங்கு சென்று மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்தித்து பேசவிருப்பதாகவும் கூறப்படுகிறது. டெல்லி செல்லும் முன்பாக பெங்களூரு விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், முதல்வர் பதவி விசயத்தில் தனக்கு மன வருத்தம் இருந்தாலும் தான் யார் முதுகிலும் குத்த மாட்டேன் என்றும் யாரையும் மிரட்டமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் 135 பேரும் ஒற்றுமையுடன் இருப்பதாகவும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அனைவரும் ஒற்றுமையுடன் பணி செய்து நிறைவேற்றுவோம் என்றும் டி.கே. சிவகுமார் கூறியுள்ளார். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மூன்று நாட்கள் முடிந்த நிலையிலும் முதல்வர் யார் என்பதில் சிக்கல் நீடிப்பதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications