ககன்யான் சோதனையில் நடந்தது என்ன? எப்படி சரி செய்யப்பட்டது.. இஸ்ரோ தலைவர் விளக்கம்
பெங்களூர்: ககன்யான் சோதனையின் போது முதலில் ஏற்பட்ட பிரச்சினை என்ன? என்பது குறித்தும் அது எவ்வாறு சரி செய்யப்பட்டது என்பது குறித்தும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கம் அளித்துள்ளார்.
விண்வெளி துறையில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. நிலவின் தென் துருவத்தில் வேறு எந்த நாடும் இதுவரை ஆய்வு செய்யாத நிலையில், அங்கு ரோவரை அனுப்பி இந்தியா ஆய்வு மேற்கொண்டது. இந்தியாவின் இந்த சாதனை உலகையே திரும்பி பார்க்க வைத்தது. இஸ்ரோவின் கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் வரும் 2025 ஆம் ஆண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக மூன்று கட்ட சோதனைகளை இஸ்ரோ நடத்த இருக்கிறது. அதன்படி, முதல் கட்ட சோதனையாக முதல் ஆளில்லா டிவி-டி1 ராக்கெட் இன்று காலை 8 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ அறிவித்து இருந்தது. இதற்கான இறுதி கட்ட பணிகள் நிறைவடைந்து கவுன்டவுன் நேற்று தொடங்கியிருந்தது. இன்று காலை 8 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய இருந்த நிலையில் வெறும் 5 விநாடிகளுக்கு முன்பு கவுண்ட் டவுன் நிறுத்தப்பட்டு சோதனை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் சிறிது நேரத்தில் பிரச்னைகள் சரி செய்யப்பட்டு ககன்யான் கலன் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. வெறும் 30 நிமிடங்களில் தொழில்நுட்ப பிரச்னைகள் சரி செய்யப்பட்டு தற்போது மாதிரி கலனை (Crew Module) ஏந்திக்கொண்டு TV-D1 ராக்கெட் விண்ணில் பறந்தது. பூமியிலிருந்து புறப்பட்ட டிவி-டி1 ராக்கெட் 8 நிமிடங்களில் திட்டமிட்ட 17.6 கிலோமீட்டர் என்ற இலக்கை அடைந்தது.

அதன் தொடர்ச்சியாக ராக்கெட்டில் பொருத்தப்பட்டு இருந்த மனிதர்கள் அமரும் பகுதி தனியாக பிரிந்தது. பின்னர் அதில் இணைகப்பட்ட மூன்று பிரம்மாண்ட பாராசூட்டுகள் மூலம் வங்கக்கடலில் பாதுகாப்பாக இறங்கியது. இதன்படி, ககன்கயான் திட்டத்தின் முதற்கட்ட சோதனை திட்டமிட்டப்படி வெற்றி பெற்றது. வங்கக்கடலில் இறங்கிய விண்கலத்தின் மனிதர்கள் இறங்கும் கலனை, இன்று மாலைக்குள் சென்னை துறமுகத்திற்கு கடற்படையினரால் மீட்டு கொண்டு வரப்பட உள்ளது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியதாவது:- TV-D1 திட்டம் வெற்றி பெற்றதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இணக்கமற்ற சூழலை கம்ப்யூட்டர் மூலம் கண்டறியப்பட்டதால் முதலில் விண்ணில் ஏவுவது நிறுத்தப்பட்டது. அதை கண்டுபிடித்து உடனடியாக சரி செய்தோம். ஒலியின் வேகத்தை விட சற்று கூடுதலாக ககன்யான் திட்டத்தில் உள்ள வாகனம் பயணித்தது. ககன்யான் சோதனை திட்டத்தின் அனைத்து நிலைகளும் வெற்றி பெற்றுள்ளது. பணிக்குழு கலன் கடலில் இருந்து மீட்கப்பட்டது குறித்து கூடுதல் தகவல்கள் மற்றும் ஆய்வுகள் குறித்த விவரங்களை பகிர்ந்து கொள்கிறோம்" என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications