குவார்ட்டருக்கு ரூ.25 வரை அதிகரிக்கும்.. மதுபானம் விலை கிடுகிடு உயர்வு.. அறிவித்த அரசு
பெங்களூர்: கர்நாடகாவில் மகளிருக்கான மாத உரிமைத்தொகையை வழங்குவதால் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க மே 1ம் தேதி முதல் குவார்ட்டருக்கு ரூ.25 வரை அதிகரிக்க மதுபானம் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எந்த வகை மதுபானத்துக்கு எவ்வளவு விலை உயர்த்தப்பட உள்ளது? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
கா்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது முதல் அடிக்கடி மதுபானங்களின் விகைள் உயர்த்தப்பட்டு வருகிறது.

கர்நாடகா அரசு சார்பில் பெண்களுக்கான மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 1.10 கோடி குடும்ப தலைவிகளுக்கு இந்த பணம் மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர பெண்களுக்கு இலவச பஸ் பயணம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது.
இதனால் கர்நாடகா அரசு நிதி நெருக்கடியில் சிக்கி வருகிறது. இதனை சமாளிக்க தான் அடிக்கடி மதுபானத்தின் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. 3 ஆண்டுகளில் மதுபானங்கள் மீதான விலை 4 முறை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் மதுபானங்கள் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டது. அப்போது இந்திய தயாரிப்பு மதுபானங்களின் விலை ரூ.10 முதல் ரூ.45 வரை உயர்ந்தது. இதன் அடுத்தக்கட்டமாக தற்போதும் மதுபானத்தின் விலை உயர்த்தபப்ட்டுள்ளது.
மேலும் பட்ஜெட்டில் அறிவித்தப்படி ஆல்கஹாலின் அளவுக்கு ஏற்றார்போல் வரி விதிக்கும் முறையை நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்காக புதிய மதுபான கொள்கை உருவாக்கப்பட்டது. அதன்படி மதுபானத்தில் ஆல்கஹால் அளவு அதிகமாக இருந்தால், வரியும் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 5வது முறையாக மதுபான விலை அதிகரிக்கப்பட உள்ளது.
இந்திய நாட்டு தயாரிப்பு மதுபானங்களான விஸ்கி, ரம், பிராந்தி, ஜின் போன்றவற்றின் விலை குவார்ட்டருக்கு ரூ.15 முதல் ரூ.25 வரை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. ரூ.80-க்கு விற்கப்பட்ட (குவார்ட்டருக்கு) மதுபானம் ரூ.95 ஆகவும், ரூ.95-க்கு விற்கப்பட்ட மதுபானம் ரூ.110 ஆகவும், ரூ.120-க்கு விற்கப்பட்ட மதுபானம் ரூ.135 ஆகவும், ரூ.150-க்கு விற்கப்பட்ட மதுபானம் ரூ.170 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டி.எஸ்.பி. பிளாக் டீலக்ஸ் போன்ற குறைந்த விலை இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபானங்களின் விலை 11 முதல் 16 சதவீதம் வரை அதிகரிக்கும். பீர் விலையும் கொஞ்சம் அதிகரிக்கப்பட உள்ளது.
மதுபான விடுதி (பார்)மற்றும் உணவகங்களில் சேவை கட்டணங்கள் சேர்க்கப்படுவதால் அங்கு இந்த வகை மதுபானத்தின் விலை இன்னும் அதிகரிக்கும். இருப்பினும் கூட மதுபிரியர்களுக்கு ஒரு ஆறுதலான விஷயம் உள்ளது. அது என்னவென்றால் வெளிநாட்டு மதுபானங்களின் விலை 5 முதல் 15 சதவீதம் வரை குறைய வாய்ப்பு உள்ளது.
-
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
100 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தும் முதல்வர் பதவியை விட்டு கொடுத்த சித்தராமையா.. ஏன் தெரியுமா? பின்னணி! -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடக அரசியலில் அதிரடி.. 1 முதல்வர், 4 துணை முதலமைச்சர்கள்.. டிகே.சிவக்குமார் மாஸ்டர் பிளான்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications