70+ சீட்டாமே.. பாஜகவே எதிர்பார்க்கல.. மெகா அஸ்திரத்தை எடுத்த காங்கிரஸ்.. புட்டு புட்டு வைத்த தலைவர்

கர்நாடக தேர்தலை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சி வேகம் எடுத்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: சித்தராமையாவின் அரசியலும், வேகமும், கர்நாடக பாஜகவை எரிச்சலூட்டி வருகின்றன.. பாஜக மீதான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி புட்டு புட்டு வைத்துவரும் நிலையில், கர்நாடக அரசியலில் பரபரப்பு கூடி வருகிறது.
கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனால், ஆட்சியை தக்க வைக்க பாஜக களத்தில் குதித்துள்ளது..

அம்மாநிலத்தில் 224 உறுப்பினர்களை கொண்ட அம்மாநில சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. எனவே, கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதத்திற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலை உள்ளது..

மாம்பழம்

மாம்பழம்

அதனால், அங்குள்ள அரசியலில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், மக்களின் குரல் என்ற பெயரில் தன்னுடைய தேர்தல் பிரச்சார யாத்திரையை தொடங்கியது.. கர்நாடக காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவகுமாரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான சித்தராமைய்யாவும் இணைந்து வரும் 29ம் தேதி வரை ஒரே பஸ்ஸில் பயணித்து இந்த பிரச்சார யாத்திரையை மேற்கொள்ள உள்ளனர். ஆளும் கட்சியான பாஜகவுக்கு எதிராகவும் குற்றப்பத்திரிகையை வெளியிடப்பட்டது. அதேபோல, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்களை மக்கள் தெரிவிக்கும் வகையிலான வெப்சைட் ஒன்றும் தொடங்கப்பட்டுள்ளது..

பெண்கள்

பெண்கள்

இந்நிலையில் சித்தராமையா பேசிய பேச்சு, பாஜகவை மேலும் கடுப்பாக்கி வருகிறது.. பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மகளிர் மாநாட்டில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியபோது, "மாநிலத்தில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலின் போது பெண்களுக்காக 21 திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தப்படும் என்று பாஜக தலைவர்கள் சொன்னார்கள்.. மாநிலத்தில் ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன.. தேர்தலின்போது பெண்களிடம் அளித்த எந்த வாக்குறுதிகளையும் பாஜக நிறைவேற்றவில்லை... மூன்றரை ஆண்டுகால ஆட்சியில் பெண்களுக்கென எந்த திட்டத்தையும் கொண்டு வந்து பாஜக அரசு செயல்படுத்தவில்லை.

மின்சாரம்

மின்சாரம்

இப்போது வீட்டுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்த பின்பு, இத்தனை ஆண்டுகளாக தூங்கி கொண்டிருந்த அரசு, பட்ஜெட்டில் பெண்களுக்கென திட்டங்களை அறிவிப்போம் என்று சொல்கிறார்கள்.. ஒட்டுமொத்தமாக 2018-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது 600 வாக்குறுதிகளை மக்களுக்கு பாஜக கொடுத்திருந்தது. அவற்றில் 10 சதவீத வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றி இருக்கிறார்கள். நான் முதல்வராக இருந்தபோது 100 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி இருந்தேன். இந்த நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், பெண்கள் முன்னேற்றம் அடைய வேண்டும்.

 இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது பெண்களுக்கான வேலை வாய்ப்பை 30 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக உயர்த்தி இருந்தோம். பெண்களுக்கு ஆதரவாகவும், பாதுகாப்பாகவும் பாஜக இல்லை. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படும். வேலை வாய்ப்பு, அரசியல் ஆகியவற்றில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். சட்டசபை தேர்தல், மேல்-சபை தேர்தலிலும் பெண்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும்" என்று சித்தராமையா பேசியுள்ளார்.

 பின்னடைவு

பின்னடைவு

சித்தராமையா பேசியுள்ளது பாஜகவுக்கு மேலும் கடுப்பை தந்து வருகிறது.. பாஜகவின் அதிர்ச்சிக்கு இன்னொரு காரணமும் உள்ளது.. கர்நாடகா சட்டசபை தேர்தல் இன்னும் 3 மாதத்தில் நடைபெற உள்ள நிலையில் பாஜக சார்பில் ஒரு சர்வே மேற்கொள்ளப்பட்டது... இந்த சர்வே முடிவில், பாஜகவுக்கு பெரும் பின்னடைவும், காங்கிரஸ் கட்சியின் ‛கை' ஓங்கியும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.. அதாவது, மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் 70 இடங்களுக்குள் மட்டுமே பாஜக வெற்றி பெறும் என்று சர்வே ரிப்போர்ட் வந்துள்ளது.. இந்த தகவல் டெல்லி பாஜகவரை சென்றுள்ளதாகவும், இது அவர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருவதாகவும் சொல்கிறார்கள்,..

 தற்கொலைகள்

தற்கொலைகள்

இதையடுத்து, மேலிட தலைவர்கள் கர்நாடகத்தை மையம் கொண்டு, பிரச்சாரங்களை துவக்கலாம் என்றும், குறிப்பாக, மோடியின் பிரசாரம், அமித்ஷாவின் வியூகங்கள் போன்றவை எப்படியாவது பாஜகவை மீண்டும் ஆட்சியில் தூக்கி நிறுத்தக்கூடும் என்றும் நம்பப்பட்டு வருகிறது. கர்நாடக பாஜகவில் அடுத்தடுத்த பிரச்சனைகள், கல்விப்பாடத்திட்டங்களில் ஏற்பட்ட சர்ச்சைகள், ஒப்பந்தக்காரர்கள் தற்கொலை என நெருக்கடிகள் கூடி வருகின்றன.. இது எல்லாவற்றிற்கும் மேலாக, மதம்சார்ந்த பிரச்சனைகளும், போராட்டங்களும் கர்நாடகாவில் வெடித்து வருவதும் அதிகரித்து வருவதும், பாஜகவுக்கு எதிராக தேர்தலில் அமையலாம் என்கிறார்கள்.. இதையடுத்து, அடுத்தக்கட்ட முயற்சியில் மேலிட பாஜக களமிறங்கி உள்ளதாக தெரிகிறது..!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+