வாட்ஸ் அப்பில் வந்த போட்டோ.. கோபத்தில் திருமணத்தை நிறுத்திய மாப்பிள்ளை!
வாட்ஸ் அப் புகைப்படத்தால் கர்நாடகாவில் நடக்கவிருந்த திருமணம் ரத்து செய்யப்பட்டது.
Recommended Video

பெங்களூரு: வாட்ஸ் அப்பில் வந்த புகைப்படத்தால் அதிர்ச்சி அடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் சேக்லேஷ்பூரைச் சேர்ந்தவர் தாரேஷ். இவருக்கும் ஸ்ருதி என்பவருக்கும் பெரியவர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. திருமண நாளன்று திருமணம் நடைபெற சில மணி நேரங்களே இருந்த நிலையில், தாரேஷுக்கு வாட்ஸ் அப்பில் ஒரு புகைப்படம் வந்தது. அதில், மணமகள் ஸ்ருதி வேறொரு ஆணுடன் நெருக்கமாக இருப்பதைப் பார்த்து தாரேஷ் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக இது தொடர்பாக மணமகள் வீட்டாரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது புகைப்படத்தில் இருப்பவர் பெயர் அபிலேஷ் என்றும், ஸ்ருதியும் அவரும் காதலித்து வருகின்றனர் என்பதும் தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த தாரேஷ் திருமணத்தை நிறுத்தினார். மணமகன் வீட்டார் அனைவரும் மண்டபத்தை விட்டு வெளியேறினர். இதனால் திருமண வீடு சோகத்தில் மூழ்கியது.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட பெண்ணின் அப்பா, அபிலேஷை மண்டபத்திற்கு வரவழைத்தார். பின்னர் குறிக்கப்பட்ட அதே முகூர்த்தத்தில் அபிலேஷுக்கும், ஸ்ருதிக்கும் அதே மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.
தாரேஷுக்கு வாட்ஸ் அப்பில் ஸ்ருதி - அபிலேஷ் புகைப்படத்தை அனுப்பியது யார் என்பது குறித்து தெரியவில்லை.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications