அவுங்கமேல நடவடிக்கை வேண்டாம் ப்ளீஸ்! காவி கொடியோடு சூழ்ந்த மாணவர்களுக்கு பரிவுகாட்டிய முஸ்லீம் மாணவி
பெங்களூர்: என்னை நோக்கி ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கர்நாடகா மாநில மண்டியா கல்லூரி மாணவி தெரிவித்துள்ளார்.
Recommended Video
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து கொண்டு வரும் மாணவிகளுக்கு கல்வி நிறுவனங்களுக்கு உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது எங்கள் உரிமை என கோரி மாணவிகள் பியூ கல்லூரிகளுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நாங்களும் காவி ஷால் அணிவோம் என கூறி இந்துத்துவா மாணவர்கள் சிலர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மேலும் முஸ்லீம் மாணவிகளை பார்த்தவுடன் ஜெய்ஸ்ரீராம் என கோஷமிடுகிறார்கள்.

காவி துண்டு
ஹிஜாப் வெர்சஸ் காவி ஷால் பிரச்சினை கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒரு சில இடங்களில் கல்வி நிலையங்களில் கல்வீச்சு சம்பவங்களிலும் சில மாணவர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது. இதையடுத்து நாளை முதல் கர்நாடகாவில் உள்ள அனைத்து உயர்நிலைப் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மாண்டியா கல்லூரி
இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிந்து கொண்டு வந்த மாணவி தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே வந்தார். அப்போது அந்த மாணவியை முற்றுகையிட்டு இந்துத்துவா மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த மாணவியை பின்தொடர்ந்து போய் ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டனர்.

ஆக்ரோஷம்
அந்த மாணவியும் பதிலுக்கு அல்லாஹு அக்பர் என ஆக்ரோஷமாக கோஷம் எழுப்பினார். அத்தனை மாணவர்களுக்கு மத்தியில் ஒற்றை ஆளாக போராடிய மாணவியின் தைரியத்திற்கு பாராட்டுகள் குவிகின்றன. பின்னர் அங்கு வந்த கல்லூரி முதல்வரும் கல்லூரி ஊழியர்களும் அந்த மாணவியை பத்திரமாக அழைத்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

முஸ்லீம் மாணவி முற்றுகை
முஸ்லீம் மாணவியை முற்றுகையிட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால் அந்த மாணவியோ எனது கல்லூரி மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நான் விரும்பவில்லை. மாறாக இனி அவர்கள் இது போல் நடந்து கொள்ள மாட்டார்கள் என நம்புகிறேன் என்றார்.
-
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications