மேகதாது அணை கட்டினால் நீரில் மூழ்கும் பகுதிகள்.. வேலையை ஆரம்பித்த கர்நாடகா! டிகே சிவக்குமார் தகவல்
பெங்களூர்:காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட தேவையான ஆயத்தப்பணிகள் நிறைவடைந்துவிட்டதாகக் கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுப் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இதற்கிடையே மேகதாது அணைக் கட்டும் பணிகள் தொடர்பாக அடுத்தகட்ட பணிகளில் கர்நாடக அரசு ஈடுபட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் டிகே சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணைக் கட்டும் பணிகளில் கர்நாடக அரசு தொடர்ந்து ஈட்டுப்பட்டு வருகிறது. மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், டெல்டா தொடங்கி காவேரி ஆறு பாயும் பல பகுதிகளில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும். இதன் காரணமாகவே மேகதாதுவில் அணை கட்ட தமிழகம் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேகதாது பணிகள்
இருப்பினும், கர்நாடக அரசு மேகதாது பணிகளை விடுவதாக இல்லை. சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட கர்நாடக பட்ஜெட்டிலும் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகள் கூறப்பட்டு இருந்தது. அதாவது காவேரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட ஆயத்தப்பணிகள் நிறைவடைந்துவிட்டதாகவும் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் அணை கட்டுமானம் தொடங்கப்படும் என அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார்
இந்தச் சூழலில் தான் மேகதாது அணை விவகாரம் தொடர்பாகக் கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். மேகதாதுவில் கனகபுரா அருகே அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அங்கு அணை கட்டப்படும்போது எவ்வளவு நிலம் நீரில் மூழ்கும் என்பதைக் கண்டறியும் பணிகளில் வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக அம்மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.
டிகே சிவக்குமார் முக்கிய கருத்து
தனது சொந்த தொகுதியான கனகபுரா தொகுதியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளுக்கு அம்மாநில துணை முதல்வர் சிவக்குமார் அடிக்கல் நாட்டினார். குறிப்பாக, அர்காவதி நதியில் பல்வேறு தடுப்பணைகள் அமைக்கும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மேகதாது திட்டத்திற்காகத் தனி அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அணை அமைக்கப்படும்போது நீரில் மூழ்கும் நிலத்தின் அளவைக் கண்டறியும் பணிகளில் வருவாய் மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். கர்நாடக மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தக் காவிரி நீரைக் கொண்டுவரும் பணிகள் நடந்து வருகிறது
நிதி ஒதுக்கீடு
நமது கனகபுரா சட்டசபைக்கு மட்டும் ரூ.400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.. எனது தொகுதிக்கு மட்டும் இவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என மற்ற தொகுதிகளின் பிரதிநிதிகள் கேள்வி கேட்கலாம். மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற இந்த நிதி படிப்படியாகவே ஒதுக்கப்படுகிறது. இங்கு சுமார் ₹250 கோடி நிதி நீர்வளத்துறை பணிகளுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன.
நமது தொகுதியில் உள்ள பல்வேறு குளங்களை நிரப்பத் தேவையான நடவடிக்கை எடுப்பேன். படிப்படியாக இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். சங்கமாவிலிருந்து (அர்காவதி மற்றும் காவேரி நதிகள் இணையும் இடம்) தண்ணீர் கொண்டு வந்து இந்தப் பகுதியில் உள்ள 21 ஏரிகளை நிரப்பத் திட்டமிட்டுள்ளோம்.
நிலத்தை விற்க வேண்டாம்
உங்கள் நிலத்தை இப்போதே அவசரப்பட்டு விற்க வேண்டாம். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பட்டுகள் குறைந்துள்ளன. இதனால் இங்குள்ள மல்பெரி மரத்தின் விலை அதிகரிக்கும். இதன் காரணமாகவே நான் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் உங்கள் நிலத்தை விற்க வேண்டாம். வரும் காலத்தில் அதற்கு நல்ல விலை கிடைக்கும்" என்றார்.
தமிழ்நாடு அரசு பதிலடி
அதேநேரம் முன்னதாக கர்நாடக அரசு எவ்வளவு முயன்றாலும் மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம் எனத் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இல்லாமல் கர்நாடகாவால் தலைகீழாக நின்றாலும் மேகதாது அணையைக் கட்ட முடியாது எனக் கூறியிருக்கிறார்.
-
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை












Click it and Unblock the Notifications