Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாரடைப்பிற்கும் கொரோனா வேக்சினுக்கும் தொடர்பில்லை.. வேறு என்ன காரணம்! கர்நாடக மருத்துவ குழு ரிப்போர்ட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் கடந்த சில காலமாகவே மாரடைப்பால் இளைஞர்கள் அதிகம் உயிரிழப்பதாகத் தகவல் வெளியாகி அச்சத்தை அதிகரித்திருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த அம்மாநில அரசு மருத்துவக் குழு ஒன்றையும் அமைத்திருந்தது. இதற்கிடையே அந்தக் குழு அளித்துள்ள முடிவில் கொரோனா தடுப்பூசிக்கும் அதிகரிக்கும் மாரடைப்பிற்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளது.

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் மே- ஜூன் காலகட்டத்தில் சில வாரங்களில் 20+ இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழந்தனர். அவர்களில் பலர் இளைஞர்கள் என்பதால் அங்கு மக்களிடையே இது குறித்து அச்சம் ஏற்பட்டது. இதையடுத்து இது குறித்து விசாரிக்கத் தனியாக வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அந்த வல்லுநர் குழுவின் அறிக்கை இப்போது கர்நாடக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

No Link Between Covid Vaccine and Heart Attack Spike in Karnataka Probe Finds
Photo Credit:

மருத்துவ அறிக்கை

மொத்தம் 24 மரணங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உயிரிழந்தவர்களில் 14 பேர் 45 வயதுக்குட்பட்டவர்கள்.. மேலும், இறந்தவர்களில் 10 பேர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள். மொத்த இறப்புகளில், நான்கு மரணங்கள் இதய நோய் அல்லாத காரணங்களால் நிகழ்ந்தவை. அவை சிறுநீரக நோய், விபத்துகள், தொற்று மற்றும் மின்சாரம் தாக்கியதால் ஏற்பட்டவை.

20 வழக்குகள் இதயம் தொடர்பானவை என அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 10 கேஸ்களுக்கு உடற்கூறு ஆய்வு, எலக்ட்ரோ கார்டியோகிராம் மூலம் இதயப் பாதிப்பு என்பது உறுதிப்படுத்தப்பட்டன. மீதமுள்ள 10 கேஸ்களுக்கு அறிகுறிகளை வைத்துப் பார்க்கும் போது இதய நோய்ப் பாதிப்பாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.

இதர காரணங்கள்

மேலும், இறந்தவர்களின் உடல்நலம் மற்றும் வாழ்க்கை முறை ஆபத்து குறித்த காரணங்களையும் மருத்துவ அறிக்கை பட்டியலிட்டது. அதில் 8 பேருக்கு உடல் பருமன் மற்றும் மது அருந்துதல் காரணமாக இருக்கிறது. 7 பேருக்கு நீரிழிவு நோய் காரணமாக உள்ள நிலையில், 6 பேருக்குப் புகைபிடித்தல் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக இருக்கிறது. மேலும், 3 பேருக்கு இதய நோய் அல்லது குடும்பத்தில் இதய நோய் இருந்ததற்கான வரலாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் மே-ஜூன் 2024 தரவுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஹாசனில் இதய மரணங்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வு எதுவும் இல்லை. பெங்களூர், மைசூர் மற்றும் கலபுரகி போன்ற பிற மாவட்டங்களின் தரவுகளுடன் ஒப்பிடும்போது, ​​இதயப் பாதிப்பால் ஏற்படும் மரணங்கள் இயல்பாகவே உள்ளது அல்லது சற்று குறைந்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரிக்கவில்லை

புள்ளிவிவர ரீதியாக இதயப் பாதிப்பு அதிகரிப்பு இல்லை என்ற போதிலும், அந்த ரிப்போர்ட்டில் பல விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பல சூழல்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்குச் சரியான நேரத்தில் மருத்துவச் சிகிச்சை கிடைக்கவில்லை அல்லது அவர்கள் வரும் வழியிலேயே உயிரிழந்துள்ளனர். பிரேதப் பரிசோதனைகள் இல்லாதது மற்றும் மருத்துவப் பதிவுகள் காணாமல் போனது உள்ளிட்ட காரணங்களால் இதயப் பாதிப்பிற்குத் துல்லியமான காரணத்தை கண்டறிய முடியவில்லை. குடும்பத்தினரும் உரிய தகவல்களைத் தரவில்லை என்பதால் விரிவான தகவல்களைச் சேகரிக்க முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவலைகள்

மிகவும் கவலை அளிக்கும் விஷயங்களில் ஒன்று என்னவென்றால் 19 முதல் 43 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் சிலரின் மரணத்தில், அவர்களுக்கு இதய நோய் இருந்ததற்கான வரலாறு எதுவும் இல்லை. இறுதியாக ஹாசனில் இதய நோயால் ஏற்படும் மரணங்கள் திடீரென அதிகரித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.. பெரும்பாலான உயிரிழப்புகளில் இதர உடல்நலக் காரணங்களைக் கண்டறிய முடிந்துள்ளது.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள நபர்களுக்கு இதய பரிசோதனையை நடத்த கர்நாடக அரசு ரெடியாகி வருகிறது. மேலும், சமுதாய சுகாதார மையங்களில் இதய பாதிப்பு தொடர்பான எலக்ட்ரோ கார்டியோகிராம் (ஈசிஜி) கருவிகளைப் பொருத்தவும், மாநிலத்தின் ஹிருதய ஜோதி திட்டத்தை விரிவுபடுத்தவும் சுகாதார அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கர்நாடக அரசு

மேலும், ஆட்டோ ரிக்ஷா மற்றும் டாக்ஸி ஓட்டுநர்களுக்கான சிறப்பு இதய பரிசோதனைகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. இதற்காக அரசுக்கும் ஓட்டுநர் சங்கங்களுக்கும் இடையே ஒரு கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டு, அதன் மூலம் பரிசோதனை முகாம்கள் நடத்தப்படவுள்ளன. பள்ளிகள், உடற்பயிற்சிக் கூடங்கள் மற்றும் பிற பொது இடங்களில் சிபிஆர் அளிப்பது குறித்தும் விழிப்புணர்வு நடத்தப்பட்டுள்ளது.

வேக்சின் காரணம் இல்லை

அதாவது சுருக்கமாகச் சொல்லப் போனால் திடீரென அதிகரித்துள்ளதாகக் கருதப்பட்டாலும் உண்மையில் மாரடைப்பு அதிகரிக்கவில்லை. மேலும், இதற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் காரணம் இல்லை. பெரும்பாலான இறப்புகளுக்கு ஏற்கனவே அறியப்பட்ட உடல்நல அபாயங்கள் காரணமாக இருக்கலாம் என்பதே அதன் முடிவாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+