சந்திரயான் 3: லேண்டர், பிரக்யான் விழித்தெழ வாய்ப்பு இருக்கா? இல்லையா? வெளியான புது தகவல்!
பெங்களூர்: நிலவில் சூரிய ஒளி பட தொடங்கியதால் பிரக்யான் ரோவர், விக்ரம் லேண்டர் விழித்தெழ வைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, சந்திரயான் விண்கலம் மீண்டும் செயல்பட வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து இஸ்ரோ அதிகாரிகள் கூறிய தகவல் வெளியாகியுள்ளது.
நாம் வாழும் இந்த பூமியின் துணைக்கோளான நிலவில் என்னதான் இருக்கிறது... அங்கு மனிதர்கள் வாழ சாத்தியம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நிலவு குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்கு அடுத்த படியாக இந்தியா முன்னிலை வகிக்கிறது. சந்திரயான் திட்டங்களின் மூலம் நிலவு குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, கடந்த 2008 ஆம் ஆண்டு விண்ணில் ஏவிய சந்திரயான் 1 விண்கலம் நிலவில் தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்தது.

நிலவு குறித்த ஆராய்ச்சியில் பெரும் திருப்பு முனையாக இது அமைந்தது. அதன்பிறகு சந்திரயான் 2 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இந்த திட்டம் லேசான சறுக்கலை சந்தித்தது. எனினும் இதில் இருந்து பாடம் கற்ற இஸ்ரோ, கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. நிலவில் இதுவரை எந்த நாடும் ஆய்வு செய்யாத தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்த விண்கலத்தை இந்தியா அனுப்பியது.
ஆகஸ்ட் 17 ம் தேதி உந்துவிசை கலனில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் ‛சாப்ட் லேண்டிங்' முறையில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தப்படியாக நிலவில் இறங்கிய 4வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது. அதோடு தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற சாதனையை இந்தியா பெற்றது.
அதன்பிறகு விக்ரம் லேண்டரில் இருந்து திட்டமிட்டப்பட்டி பிரக்யான் ரோவர் நிலவில் தரையிறங்கியது. தொடர்ந்து 14 நாட்கள் நிலவின் சிவசக்தி பகுதியில் பிரக்யான் ரோவர் ஆய்வு செய்தது. 100 மீட்டர் தூரம் பயணம் மேற்கொண்ட ரோவர், நிலவில் உள்ள சல்பர் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை உறுதி செய்து. இதைத் தொடர்ந்து, நிலவில் இருள் சூழ்ந்தததால் விக்ரம் லேண்டர், ரோவர் கருவிகளின் செயல்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
ஏனென்றால் நிலவில் இருள் என்பது 14 நாட்கள் தொடர்ந்து இருக்கும். இந்த சமயத்தில் குறைந்தபட்சம் -150 டிகிரி செல்சியஸ் முதல் -253 டிகிரி செல்சியஸ் வரை குளிர் இருக்கும். இதனால் சூரியஒளி கிடைக்காமல் லேண்டர், ரோவர் கருவிகள் செயல்பட முடியாதது. தற்போது நிலவில் மீண்டும் சூரியஒளி பட தொடங்கி உள்ளதால், அதை மீண்டும் விழித்தெழ வைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஆனால் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரில் இருந்து எவ்வித சிக்னலும் பெற முடியவில்லை. சிக்னல் பெறும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது வரை எந்த சிக்னலும் கிடைக்கவில்லை. இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத இஸ்ரோ அதிகாரி கூறுகையில், நிலவின் இரவு நேரத்தில் நிலவி கடுமையான தட்ப வெப்பநிலை காரணமாக பிரக்யான் ரோவர் மற்றும் லேண்டரை விழித்தெழ வைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக தெரிவித்தார்.
-
சீனாவில் ஆடு மேய்க்கும் வேலைக்கு மாதம் 1 லட்சம் சம்பளம்! பண்ணையில் திரளும் பட்டதாரிகள்! பின்னணி என்ன -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications