பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேசிஆர் செய்த ஒரே ஒரு போன் கால்.. குமாரசாமி ஆட்சிக்கு ஏற்பட்ட ஆபத்து.. கர்நாடகாவில் மீண்டும் பரபர!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் செய்த ஒரே ஒரு போன் கால் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Operation Lotus 3.0: குமாரசாமியுடன் பேசிய கேசிஆர்.. கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பு- வீடியோ

    பெங்களூர்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் செய்த ஒரே ஒரு போன் கால் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் ஆட்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    லோக்சபா தேர்தலில் இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவு நிறைவு பெற்று இருக்கிறது. இன்னும் 2 கட்ட வாக்குப்பதிவுகள் மட்டுமே உள்ளது. மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது.

    இந்த நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்தான் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை உருவாக்க இப்போதே தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அவர் மூன்றாம் அணியை உருவாக்குவதற்காக, மாநில தலைவர் ஒருவரை பிரதமராக்குவதற்காக இப்போதே, தென்னிந்திய கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

    தெலுங்கானா முதல்வர்

    தெலுங்கானா முதல்வர்

    தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஏற்கனவே கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். அதேபோல் கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் போனில் பேசினார். இன்னும் சில தலைவர்களை சந்திக்க உள்ளார். இந்த நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமியிடம் கேசிஆர் போனில் பேசியது, குமாரசாமியின் ஆட்சிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.

    குமாரசாமி என்ன

    குமாரசாமி என்ன

    இதனால் கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர் மறைமுக எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கி இருக்கிறார்கள். குமாரசாமியின் மஜத கட்சி தற்போது காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன்தான் கர்நாடகாவில் ஆட்சி நடத்தி வருகிறது. லோக்சபா தேர்தலையும் இவர்கள் கூட்டணி வைத்துதான் சந்தித்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் மூன்றாவது அணியின் பேச்சுவார்த்தைக்கு மஜத செவி சாய்த்து இருப்பது காங்கிரசுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

    பாஜக திட்டம்

    பாஜக திட்டம்

    இப்படி ஒரு வாய்ப்பைத்தான் பாஜக இத்தனை நாட்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தது. தற்போது இதனால், ஆபரேஷன் லோட்டஸை பாஜக மீண்டும் கையில் எடுத்துள்ளது. அதன்படி குறிப்பிட்ட சில காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி அவர்களை பதவி விலக செய்து, மஜத ஆட்சியை கவிழ்த்து, அரியணை ஏறலாம் என்று பாஜக திட்டமிட்டு உள்ளது.

    ஆபரேஷன் லோட்டஸ்

    ஆபரேஷன் லோட்டஸ்

    காங்கிரஸ் கட்சியில் மஜதவின் செயல்பாட்டால் அதிர்ச்சியில் இருக்கும் எம்எல்ஏக்களை வாங்க பாஜக திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான பணிகளை பாஜக இப்போதே தொடங்கிவிட்டதாக தெரிவிக்கிறார்கள். சந்திரசேகர ராவின் ஒரு போன் கால் கர்நாடக அரசியலில் நிறைய பாதிப்பை ஏற்படுத்த போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Operation Lotus 3.0: Karnataka Coalition Government may collapse due to federal allaince talks.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X