பாஜகவினருடன் பேசிய பிறகே.. சிம் கார்ட் முடக்கம்! எதிர்க்கட்சி துணை ஜனாதிபதி வேட்பாளர் புகார்
பெங்களூரு: பாஜகவினருக்கு தொடர்புகொண்ட பின்னர் தனது சிம் கார்ட் முடக்கப்பட்டு உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் மார்கரெட் ஆல்வா குற்றம்சாட்டி இருக்கிறார்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவிகாலம் முடிவடைய இருப்பதால் வரும் ஆகஸ்டு 6 ஆம் தேதி குடியரசு துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஜூலை 6 ஆம் தேதி தொடங்கிய குடியரசுத் துணைத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கல் ஜூலை 19 ஆம் தேதி நிறைவடைந்தது.

பாஜக வேட்பாளர்
இதனை தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் தத்தமது வேட்பாளர்களை அறிவிக்க பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டனர். அதன் தொடர்ச்சியாக குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கர் அறிவிக்கப்படார்.

ஜக்தீப் தங்கார் வேட்புமனு
இதனை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தங்கர் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், மத்திய வேளாந்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உள்ளிட்டோர் வேட்புமனுத் தாக்கலின்போது உடன் இருந்தனர்.

மார்க்கரெட் ஆல்வா வேட்புமனுத்தாக்கல்
எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் மார்க்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டார். வேட்புமனுத் தாக்கலின் கடைசி நாளான 19 ஆம் தேதி அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திமுக எம்.பி. திருச்சி சிவா, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

மார்க்கரெட் ஆல்வா குற்றச்சாட்டு
இரு தரப்பு வேட்பாளர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மார்க்கரெட் ஆல்வா ட்விட்டரில் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார். அதில், "பாஜகவை சேர்ந்த சில நண்பர்களுடன் பேசி முடிந்த பிறகு, எனது செல்போனுக்கு வரும் அழைப்புகள் டைவர்ட் செய்யப்படுகின்றன. என்னால் எந்த அழைப்பையும் செய்ய முடியவில்லை. எனக்கு எந்த அழைப்பும் வரவில்லை.
Recommended Video

சிம் கார்டு முடக்கம்
இனி பாஜக, திரிணாமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் தொடர்புகொள்ள மாட்டேன்." என்று குறிப்பிட்டு உள்ளார். அவர் பதிவிட்டு உள்ள MTNL கடிதத்தில் சிம் கார்டு KYC ரத்து செய்யப்பட்டதால் 24 மணி நேரத்துக்குள் முடக்கப்படும்." என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications