Time to lead! ஒரே ட்வீட்டில் 2024 தேர்தலில் யாருக்கு எதிர்காலம்! புட்டுபுட்டு வைத்த பி.சி.ஸ்ரீராம்!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றது குறித்து ஒளிப்பதிவாளர் பி சி ஸ்ரீராம் ட்வீட் போட்டிருக்கிறார்.
கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 111 இடங்களில் வென்றுள்ளது. பாஜக 54 இடங்களில் வென்றுள்ளது. மஜத 16 இடங்களில் வென்றுள்ளது.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 25 இடங்களில் முன்னிலையில் இருந்து வருவதால் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசனை நடத்த காங்கிரஸ் கட்சி சார்பில் வென்ற எம்எல்ஏக்கள் நாளை ஆலோசனை நடத்துகிறார்கள்.
இந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றதற்கு பலரும் ட்வீட் போட்டு வருகிறார்கள். கர்நாடகாவில் சர்வாதிகாரம் தோற்றது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். அது போல் தமிழக முதல்வர் ஸ்டாலின் சோனியா காந்திக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அத்துடன் அவர் கர்நாடகாவில் மிகச் சிறப்பான வெற்றியை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு எனது வாழ்த்துகள்.
கர்நாடகா மக்கள் வாக்களித்த போது நியாயப்படுத்த முடியாத வகையில் சகோதரர் ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்றத்தில் இருந்து பதவி நீக்கம் செய்தது நாட்டின் முதன்மை புலனாய்வு அமைப்புகளை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தவறாக பயன்படுத்தியது இந்தித் திணிப்பு, பெருமளவிலான ஊழல் என அனைத்தும் அவர்கள் மனதில் எதிரொலித்திருக்கிறது. பாஜகவின் பழிவாங்கும் அரசியலுக்கு தக்க பாடம் அவர்கள் தங்கள் கன்னடர்கள் கொடுத்துள்ளனர்.
திராவிட நிலப்பரப்பில் இருந்து பாஜக முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. அடுத்து 2024 ஆம் ஆண்டு பொது தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். இந்தியாவில் மக்களாட்சியையும் அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்! என தெரிவித்துள்ளார். அது போல் திமுக எம்பி கனிமொழி கூறியிருப்பதாவது: இது ஒரு மாநிலத்திற்கு கிடைத்த வெற்றி மட்டுமல்ல, நாளை நாடு முழுவதும் நடைபெறவுள்ள மாற்றத்திற்கான வாக்குறுதியும் கூட என தெரிவித்துள்ளார்.

அது போல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். இந்த நிலையில் சினிமா ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மதசார்பற்ற மக்கள் விழித்து கொண்டார்கள். தலைமையேற்க நேரம் வந்துவிட்டது என கூறியுள்ளார். அப்படியென்றால் மத்தியில் ஆளும் பாஜகவை வரும் 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் தோற்கடித்து வீட்டுக்கு அனுப்பிவிட்டு மதசார்பறற கட்சியான காங்கிரஸ் தலைமையேற்க நேரம் வந்துவிட்டதாக அவர் கூறியுள்ளதாக புரிகிறது.
பி.சி. ஸ்ரீராம் சமூகம் சார்ந்த கருத்துகளை அவ்வப்போது வெளியிடுவார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டை தமிழ்நாடு என குறிப்பிடாமல் தமிழகம் என குறிப்பிடுவதே சரியாக இருக்கும் என பேசியிருந்தார். இதற்கு பலதரப்பினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். அந்த வகையில் பி.சி. ஸ்ரீராம் கூறுகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல்வாதிபோல நடந்து கொள்கிறார். இந்த தேர்தலில் அவருடைய எஜமானர்கள் எப்படியாவது வெற்றி பெற வேண்டும். அதனால் அவரை பயம் பற்றிக் கொண்டிருக்கிறது. தற்போதைய யுத்தம் என்பது பிரிவினைவாதத்திற்கும், வெறுப்புப் பேச்சிற்கும் எதிரானது. ஆளுநர் பதவி விலக வேண்டும். அவரின் பேச்சு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications