பிரமாண்ட ரோட் ஷோ! சந்திரயான் வெற்றிக்காக.. இஸ்ரோ விஞ்ஞானிகளை நேரில் சென்று வாழ்த்தும் பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நிலவின் தென் துருவ பகுதியில் இஸ்ரோவின் சந்திரயான் 3 லேண்டர் தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ள நிலையில், இதற்கு காரணமான விஞ்ஞானிகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று சந்திக்க இருக்கிறார். இதற்காக பெங்களூரில் பாஜக பிரமாண்ட ரோட் ஷோ நடத்த திட்டமிட்டுள்ளது.

நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

PM Modi visits and honors the scientists responsible for Chandrayaan 3s historic achievement

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது.

விண்வெளி துறையின் முன்னோடியான ரஷ்யா அனுப்பிய லூனா 25 விண்கலம் கூட நிலவின் தென் துருவ பகுதியில் தரையிறங்க முடியாமல் நிலவில் மோதி செயலிழந்த நிலையில், இந்தியாாவின் சந்திரயான் 3 வெற்றிகரமாக தரையிறங்கி இருப்பது உலக நாடுகள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்நிலையில் இதற்கு காரணமான விஞ்ஞானிகளை, சந்திரயான் 3 தரையிறங்கிய நாளன்றே பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கால் மூலம் அழைத்து வாழ்த்து கூறியிருந்தார்.

அந்த சமயம் தென்னாப்பிரிக்காவின் பிரிக்ஸ் மாநாடு நடந்துக்கொண்டிருந்ததால் அவரால் விஞ்ஞானிகளை நேரில் சந்திக்க முடியவில்லை. அதேபோல, இந்த மாநாடு முடித்த கையோடு அவர் கிரீஸ் நாட்டுக்கு சென்றிருக்கிறார். கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாக்கிஸ் அழைப்பின் அவர் இந்நாட்டிற்கு சென்றிருக்கிறார். பிரதமர் மோடி கிரீஸ் செல்வது இதுவே முதல்முறை. அதேபோல கடந்த 40 ஆண்டுகளுக்கு பின்னர் கிரீஸ் செல்லும் இந்திய பிரதமர் என்கிற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

கிரீஸில் அதிபர் மற்றும் பிரதமரைச் சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இதனையடுத்து சனிக்கிழமை (நாளை) அவர் இந்தியா திரும்புகிறார். இந்தியா வரும் அவர் இஸ்ரோ தரை கட்டுப்பாட்டு மையம் அமைந்திருக்கும் பெங்களூரின் பீன்யாவில் ஒரு மணி நேரம் திறந்த வேனில் ஊர்வலம் (ரோட் ஷோ) சென்று மக்களை சந்திக்க இருக்கிறார். பின்னர் தரைக்கட்டுப்பாட்டு தளத்திற்கு சென்று சந்திரயான் 3 திட்ட பணியில் ஈடுபட்ட விஞ்ஞானிகளை பாராட்டி கவுரவிக்கிறார்.

PM Modi visits and honors the scientists responsible for Chandrayaan 3s historic achievement

பிரதமரின் சாலை ஊர்வலத்தை சிறப்பாக நடத்த கர்நாடக பாஜக அதற்கான தயாரிப்பு வேலைகளில் தீவிரமாக இயங்கி வருகிறது. இது குறித்து பாஜகவின் நிர்வாகிகள் கூறுகையில், "இந்த ரோட் ஷோவுக்கு 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் தொண்டர்களை அணிதிரட்ட நாங்கள் திட்டமிட்டுள்ளோம். இந்த ரோட் ஷோ எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தின் துவக்கமாக இருக்கும். இருப்பினும் இந்த நிகழ்வில் பாஜகவுக்கு ஆதரவான எந்த முழக்கங்களையும் எழுப்பக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளோம்.

அதேபோல இந்த கொண்டாட்டத்தில் கட்சிக் கொடிக்கு பதில் தேசிய கொடியை மட்டுமே ஏந்த வேண்டும் என்று தொண்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது விஞ்ஞானிகளின் வெற்றி. இதனை ஒரு கட்சி சார்ந்து கொண்டாட முடியாது. எனவே இது தொடர்பாக கட்சி மேலிடம் எங்களுக்கு கறாரான உத்தரவை பிறப்பித்துள்ளது" என்று கூறியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+