"ஏங்க.. இப்படியா கட்டி வெச்சி அடிப்பீங்க".. போலீஸையே திகைக்க வைத்த இளைஞன்... மிரண்ட பெங்களூரு
போலீசில் விநோதமான புகார் தந்துள்ளார் ஒரு திருடன்
பெங்களூரு: "ஏங்க.. திருட வந்தால் இப்படியா கட்டி வெச்சி அடிப்பீங்க.. என்னை அடித்தவர்களை கைது செய்யுங்கள்" என்று ஒரு திருடர் போலீசில் கண்ணீர் வடித்துள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்தவர் ரித்தேஷ் ஜெயக்குமார்.. 18 வயதாகிறது.. இவருக்கு படிப்பு எதுவும் இல்லை.. பிக்பாக்கெட் மட்டுமே தெரிந்த தொழில்.
சாலையில் யாராவது திருட சென்றால், அவர்களை கத்தியை காட்டி மிரட்டி பணம், நகை பறிப்பதுதான் வழக்கம்.. அப்படித்தான், செப்டம்பர் 2-ம் தேதி திருட்டில் ஈடுபட்டார்..

பணம்
ஒரு கால்டாக்ஸியில் ஏறியுள்ளார்.. அந்த டிரைவர் பெயர் பிரதீப் பாட்டீல்.. அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணத்தையும், பர்ஸையும் பறிக்க முயன்றுள்ளார்... ஆனால், டிரைவரிடம் இது எடுபடவில்லை.. உஷாராகிவிட்டார்.. எவ்வளவோ மிரட்டியும் டிரைவர் உயிருக்கு பயப்படவே இல்லை.. மாறாக, ரித்தேஷை அந்த வண்டியில் இருந்து வெளியில் தள்ளிவிட்டார்.

திருடன்
அத்துடன், திருடன்.. திருடன் என்று கத்தி கூப்பாடு போட்டுள்ளார்.. அந்த சத்தத்தை கேட்டதும், பொதுமக்கள் திரண்டு வந்தனர்.. அதற்குள் ரித்தேஷ் எதுவுமே தெரியாததுபோல, கேஷூவலாக ரோட்டில் நடக்க ஆரம்பித்தார்.. விரைந்து சென்ற பொதுமக்கள் ரித்தேஷை சுற்றி வளைத்து பிடித்தனர்.. உடனே ரித்தேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பொதுமக்களை தாக்க முயற்சி செய்தார்.

தாக்குதல்
ஆனால், அதற்குள் பைக்கில் வந்த 2 பேர் ரித்தேஷை பிடித்து ஹெல்மெட்டை கொண்டு தாக்க தொடங்கிவிட்டனர்.. இது அத்தனையும் நடுரோட்டிலேயே நடந்ததால், டிராபிக் ஜாம் வந்துவிட்டது.. இதை பயன்படுத்தி கொண்டு, ரித்தேஷ் தப்பி ஓடிவிட்டார்.. ஆனாலும் டிரைவர் போலீசில் சென்று புகார் தந்தார்.. போலீசாரும் ரித்தேஷ் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.. விசாரணையும் ஆரம்பித்தனர்.

கண்ணீர்
அப்போது ரித்தேஷ் பொலபொலவென கண்ணீர் சிந்தி அழ ஆரம்பித்துவிட்டார்.. "நான் 4 மணிக்கு ரிச்மாண்ட் டவுண் பகுதியில் காரில் வந்த ஒருவரை மிரட்டினேன்.. கத்தியை காட்டியும் மிரட்டி பணம், செல்போன் கேட்டேன்.. உடனே அவர் என்னை கீழே தள்ளிவிட்டுவிட்டு, சத்தம் போட்டார்.. அங்கே 40 ,50 பேர் திரண்டு வந்து என்னை அடிச்சிட்டாங்க.. எனக்கு தலை, உதடு, கை, கால் எல்லாம் ரத்தம் வந்துடுச்சு.. என்னை தாக்கிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.. இதை ஒரு புகாராகவும் எழுதி போலீசில் தந்தார்.

புகார் மனு
இப்போது இதன் பேரில் நடவடிக்கை எடுப்பதாக சொல்லி உள்ளனர்.. மேலும், "குற்றவாளிகளை பிடிக்க பொதுமக்கள் தங்களுக்கு உதவ வேண்டுமே தவிர, அவர்களே சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக்கொள்ள வேண்டாம்" என்றும் கேட்டுக் கொண்டனர்.. இந்த விநோத சம்பவம் பெங்களூரில் பரபரப்பை கூட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications