சத்துணவு பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை வழக்கு.. தலைமறைவான பாஜக மாவட்ட செயலாளர் கர்நாடகாவில் கைது
பெங்களூர்: திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பள்ளிக்கூட சமையல் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரனை கர்நாடகாவில் இன்று போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சாமிநாதபுரத்தில் அரசு பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில், 30 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் தமிழக அரசின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு சமையல் செய்வதற்காக சத்துணவு பெண் பணியாளர் பணியாற்றி வந்தார்.

வழக்கம் போல் அவர் பள்ளியில் சமையல் வேலை செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது வரும் வழியில், புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணியின் கணவரும், பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமான மகுடீஸ்வரன் அந்த பெண்ணை வழிமறித்தார். மேலும், சமையல் கணக்கு வழக்கை பார்க்க வேண்டும் என்று சொல்லி அவரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றார்.
தொடர்ந்து அந்த பெண் ஊழியர் சமையல் கூடத்தில் பொருட்களை எடுத்து காண்பித்தார். அப்போது மகுடீஸ்வரன் அந்த பெண் ஊழியரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பதறிப்போன் பெண் ஊழியர், அங்கிருந்து வெளியே ஓடிச்சென்றார். தொடர்ந்து இது குறித்து சாமிநாதபுரம் போலீசில் அந்த பெண் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து திண்டுக்கல் பாஜக மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் மீது மானபங்கம் செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் போன்ற பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்ததும் மகுடீஸ்வரன் தலைமறைவானார். தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் அவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில், மகுடீஸ்வரன் கர்நாடகாவில் இருப்பதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் மகுடீஸ்வரனை கைது செய்தனர். தொடர்ந்து அவரை திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக, மகுடீஸ்வரன் வகித்து வந்த திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர், ஒன்றிய பார்வையாளர் பொறுப்புகளில் இருந்து நீக்குவதாக திண்டுக்கல் மாவட்ட பாஜக தலைவர் பழனி கனகராஜ் அறிவித்து இருந்தார். இதேபோல், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவரை நீக்குவதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பரிந்துரை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications