குடியரசு தினவிழாவில் கர்நாடக அலங்கார ஊர்தி நிராகரிப்பு! கன்னடர்களுக்கு அவமானம்! சித்தராமையா கொதிப்பு
பெங்களூர்: குடியரசு தின விழா அணிவகுப்பில் கர்நாடக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சித்தராமையா, கன்னட மக்களை மத்திய அரசு அவமதித்துவிட்டதாக கூறியுள்ளார்.
டெல்லியில் வரும் 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மூவர்ணக் கொடியை ஏற்றுகிறார். குடியரசு தினவிழாவில் அணிவகுப்பு நடைபெற உள்ளது. இந்த அணிவகுப்பில் ஒவ்வொரு மாநிலங்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக, அந்த மாநில அலங்கார ஊர்திகள் இடம் பெற்று வருகின்றன.
இந்த நிலையில், குடியரசு தின விழாவில் கர்நாடக மாநில அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு சார்பில், பெங்களூரு சர்வதேச விமான நிலைய மாதிரி மற்றும் பெங்களூரு நகர தெய்வமான அன்னம்மா தேவியின் சிலையுடன் அலங்கார ஊர்தி அமைக்க அனுமதி கோரப்பட்டு இருந்தது. ஆனால் கர்நாடக அரசின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளது.

அலங்கார ஊர்தி:அணிவகுப்பில் இந்த ஆண்டு கர்நாடக அரசின் அலங்கார ஊர்தி இடம் பெற அனுமதி இல்லை என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் , மாநிலங்கள் சார்பில் காட்சிக்கு வைக்கப்படும பொருட்களில், கர்நாடக அரசின் அலங்கார ஊர்தியை வைத்து கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதால், இந்த முறை கர்நாடகத்திற்கு வாய்ப்பு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாக மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. முன்னதாக கடந்த ஆண்டு நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் கர்நாடக அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி வழங்க முதலில் மறுப்பு தெரிவித்தது.
கடும் கண்டனம்: பிறகு கர்நாடகத்தில் பெரும் எதிர்ப்பு கிளம்பியதால் சிறப்பு அனுமதியை கொடுத்திருந்தது. அதன்படி, கடந்த ஆண்டு டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் கர்நாடக அரசின் அலங்கார ஊர்தியும் பங்கேற்று கவுரவிக்கப்பட்டு இருந்தது. இத்தகைய சூழலில் இந்த ஆண்டு கர்நாடக அரசின் ஊர்திக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பது அம்மாநில அரசியலில் விவாதப்பொருளாகியுள்ளது.
பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம், உலக அளவில் 3-வது சிறந்த விமான நிலையம் என்ற சிறப்பை பெற்றிருக்கிறது. கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு பல விருதுகளும் கிடைத்திருக்கிறது. அப்படி இருந்தும் குடியரசு தினவிழா அணிவகுப்பில் பெங்களூரு விமான நிலைய மாதிரியுடன் கூடிய அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுத்திருப்பதற்கு, கன்னட அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் ஆட்சி நடப்பதால் தான்: கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சித்தராமையா கூறுகையில், மாநில அரசின் வாய்ப்பை மத்திய அரசு மறுக்கிறது. காங்கிரஸ் ஆட்சி இருப்பதால்தான் இது நடைபெறுகிறது. கர்நாடாவின் அலங்கார ஊர்தியை மறுத்ததன் மூலம் 7 கோடி கன்னட மக்களையும் மத்திய அரசு இழிவுபடுத்திவிட்டது" என்று சித்தரமையா சாடியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications