”கர்நாடகாவில் காவி மயமாக்கப்பட்ட பள்ளி பாடபுத்தங்கள்” - திரும்பப்பெற சித்தராமையா வலியுறுத்தல்
பெங்களூரு: கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளை போதிக்கும் காவிமயமாக்கப்பட்ட பாடபுத்தகங்களை திரும்பப் பெற வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவரும் அம்மாநில முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா வலியுறுத்தி இருக்கிறார்.
கர்நாடக கல்வி நிலையங்களில் மதம் சார்ந்த அடையாளங்கள் இருக்கக்கூடாது என்று இஸ்லாமிய மாணவிகள் அணிந்து வரக்கூடிய ஹிஜாபுக்கு அம்மாநில அரசு தடை விதித்தது.
இந்த நிலையில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சமூக அறிவியல் மற்றும் மொழி பாடபுத்தகங்களில் உள்ள பாடங்களை திருத்தம் செய்ய ரோகித் சக்ரதிர்தா என்பவர் தலைமையில் கர்நாடக அரசு குழு அமைத்தது.

பெரியார், திப்பு சுல்தான் பாடங்கள் நீக்கம்
இந்த புதிய குழு, வரும் கல்வியாண்டுக்கான மொழி மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் மைசூர் மன்னர் திப்பு சுல்தான் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள், தந்தை பெரியார், நாராயண குழு உள்ளிட்ட சீர்திருத்தவாதிகள், முற்போக்கு கருத்து கொண்ட தலைவர்கள் குறித்த பாடங்கள் அகற்றியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

ஆர்.எஸ்.எஸ். பாடங்கள்
அதற்கு மாற்றாக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களையும், மதவெறியையும் போதிக்கூடிய பாடங்கள் புதிய புத்தகங்களில் சேர்க்கப்பட்டு இருப்பதாக சர்ச்சை கிளம்பியது. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் கேஷவ் பலிராம் ஹேட்கேவரின் பேச்சுக்கள் கர்நாடக அரசு வெளியிட்டு இருக்கும் பள்ளி பாட புத்தகங்களில் இடம் இருப்பதாக புகார்கள் குவிந்தன.

குழு கலைப்பு
இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வெளியிட்டு உள்ள அறிக்கையில், பாடநூல்களை வடிவமைத்த குழுவை கலைப்பதாக அறிவித்தார். பாடநூல் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்து விட்டதாக இந்த முடிவை எடுப்பதாக கூறினார். புத்தகங்கள் ஏதேனும் திருத்தம் தேவைப்பட்டால் அதை அரசாங்கமே மேற்கொள்ளும் என உறுதியளித்தார்.

சித்தராமையா விமர்சனம்
கர்நாடக முதலமைச்சரின் இந்த அறிவிப்பை முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான சித்தராமையா விமர்சித்து இருக்கிறார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "திரும்பப்பெற வேண்டியது பாடபுத்தகங்களைதானே தவிர, பாட புத்தகங்களை தயாரித்த குழுவை அல்ல. அவர்கள் தங்களின் நோக்கத்தை ஏற்கனவே நிறைவேற்றிவிட்டனர்.

கடும் எதிர்ப்பு
அதன் தலைவரை நீக்கிவிட்டால், அவர் தலைமையிலான குழு தயாரித்த புத்தகங்களை மட்டும் எப்படி நம்மால் ஏற்க முடியும்? என அவர் கேள்வி எழுப்பி இருக்கிறார். எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி எழுத்தாளர்கள், லிங்காயத் தலைவர்கள், கல்வியாளர்கள் பலரும் பாடபுத்தகங்களை காவிமயமாக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின்












Click it and Unblock the Notifications