Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அழுத்தம் கொடுக்கும் எம்எல்ஏக்கள்..சித்தராமையா,டிகே சிவக்குமார் மீண்டும் டெல்லி விசிட்? ஓயாத பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகத்தில் முதல்வர் பதவி விவகாரத்தில் நீண்ட இழுபறிக்கு பின் சுமூக முடிவு எடப்பட்டுள்ள நிலையில், தற்போது அமைச்சரவையில் இடம் பிடிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. எனவே இதுபற்றி கட்சி மேலிடத்துடன் விவாதிக்க சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் இன்று மீண்டும் டெல்லி பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

sources-said-siddaramaiah-and-dk-shivakumar-are-going-to-visit-delhi-today-decision-on-cabinet

கர்நாடக மாநிலத்தில் மொத்தம் உள்ள 224 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 10-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 135 இடங்களில் அபார வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், கர்நாடகாவின் புதிய முதல்வர் யார்? என்பதில் காங்கிரஸ் மேலிடத்திற்கு பெரும் தலைவலி ஏற்பட்டது.

முதல்வர் பதவியை பெறுவதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் இருவருமே காங்கிரஸ் தலைமையிடத்தில் முட்டி மோதினர். இதனால் இருவரையும் சரிகட்ட காங்கிரஸ் தலைமை பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. கடைசியில் சோனியா காந்தி தலையிட்டு பேசியதால் டிகே சிவக்குமார் தனது பிடிவாதத்தில் இருந்து இறங்கி வந்தார்.

துணை முதல்வர் பொறுப்பை ஏற்க சம்மதம் தெரிவித்ததால் முதல்வர் யார் என்ற விவகாரத்தில் கடந்த 5 நாட்களாக நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. முதல் 2½ ஆண்டுகள் சித்தராமையா முதல்வர் பதவியிலும் அடுத்த 2½ ஆண்டுகள் டி.கே .சிவக்குமார் முதல்வர் பதவியிலும் இருக்கலாம் என்ற பார்முலாவை காங்கிரஸ் மேலிடம் வகுத்ததாக கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.

மேலும் டிகே சிவக்குமாருக்கு நீர்ப்பாசனம் மற்றும் மின்சார துறை உள்ளிட்ட துறைகள் கொடுக்கப்பட இருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது. முதல்வர் விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் கச்சிதமாக காய் நகர்த்தி இழுபறியை முடிவுக்கு கொண்டு வந்ததையடுத்து டிகே சிவக்குமாரும் சித்தராமையாவும் ஒன்றாக பெங்களூரு திரும்பினர்.

பெங்களூரில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சித்தராமையா சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து ராஜ்பவன் சென்ற சித்தராமையா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை ஏற்று ஆளுநரும் சித்தராமையாவிற்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். வரும் 20 ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறுகிறது.

இதனிடையே அமைச்சர் பொறுப்பை பெறுவதற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆதரவாளர்கள் இடையே முக்கிய இலாகாக்களை கைப்பற்ற கடும் போட்டி நிலவுகிறது. லிங்காயத், ஒக்கலிகர், தலித் மற்றும் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு சாதி அடிப்படையில் அமைச்சரவையில் முக்கியத்துவம் அளிக்க காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளது.

ஆனால், சில மூத்த எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்கு இந்தத் துறை தான் வேண்டும் என்றும் அடம் பிடிப்பதாக சொல்லப்படுகிறது. 2-வது முறையாக எம்.எல்.ஏ.வாக தேர்வான பலரும் அமைச்சர் பதவி தங்களுக்கு கிடைக்கும் என்ற ஆசையில் உள்ளனர்.

இதனால் தற்போது அமைச்சரவையில் இடம்பிடிக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பொதுப்பணித் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, உள்துறை, வருவாய்த்துறை, நகர்ப்புற மேம்பாட்டு துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை குறிவைத்து மூத்த எம்.எல்.ஏக்கள் காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது. இதனால், யாருக்கு அமைச்சர் பொறுப்பு கொடுக்கலாம் என்பது தொடர்பாக தீவிர ஆலோசனை நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் இன்று டெல்லி புறப்பட்டு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து பதவியேற்பு விழாவுக்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்களை அழைக்க அவர்கள் முடிவு செய்து உள்ளனர். முதல்வர் விவகாரம் சுமூகமாக முடிந்தாலும் அமைச்சர் பதவியை கைப்பற்றுவதில் நடக்கும் கடும் போட்டியால் கர்நாடகாவில் பரபரப்பு ஓயந்த பாடில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+