கன்னடம் பேச சொல்லி தமிழ் இளைஞரை தாக்கிய கும்பல்.. சாட்டையை சுழற்றிய பெங்களூர் போலீஸ்
பெங்களூர்: பெங்களூர் கர்நாடகா தலைநகராக இருந்தாலும் அங்கு ஏராளமான தமிழர்கள் வசித்து வருகிறார்கள். அங்கு பைக்கில் வீலிங் செய்தபடி வந்த 2 இளைஞர்கள், சுற்றுலா சென்றிருந்த தமிழ் மக்களின் பேருந்தில் ஏறி தாக்குதல் நடத்தியிருந்தனர். இதுதொடர்பாக அந்த இளைஞர்கள், 'கன்னடம் பேசு.. கன்னடம் பேசு..' என்று சொல்லி தாக்கும் பதைபதைக்கும் வீடியோ வெளியாகியிருந்தது. பெங்களூர் காவல்துறை அந்த இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தின் தலைநகர் பெங்களூரில் ஏராளமான தமிழ் மக்கள் வசித்து வருகிறார்கள். ஐடி துறை உள்ளிட்ட வேலை வாய்ப்புகள், தொழில் கல்வி உள்ளிட்டவற்றுக்காக தமிழர்கள் பெங்களூரில் உள்ளனர். மேலும் பல மக்கள் தமிழ்நாட்டில் இருந்து பணி, கல்வி உள்ளிட்டவற்றுக்காக தினசரி பெங்களூர் சென்று வருகின்றனர்.

கன்னட இளைஞர்கள் அத்துமீறல்
சமீப காலங்களாக கர்நாடகாவில் வேற்று மொழி நபர்கள், உள்ளூர் நபர்களால் அவ்வபோது தாக்கப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. முக்கியமாக கர்நாடகாவில் இருந்துவிட்டு கன்னடம் மொழி பேச தெரியவில்லை என்றால் அதை வைத்து சிலர் பிரச்சனை செய்து சர்ச்சையில் சிக்கி வந்தனர். அப்படி சமீபத்தில் பெங்களூர் புறநகரில் நடைபெற்ற ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேற்று முன்தினம் நள்ளிரவு பெங்களூர் அத்திபெலே பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கிற்கு தமிழ்நாட்டை சேர்ந்த் ஒரு டூரிஸ்ட் பஸ் சென்றுள்ளது. பெட்ரோல் நிரப்பிவிட்டு, பேருந்தில் இருந்தவர்கள் கழிப்பறை சென்றுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் 2 இளைஞர்கள் பைக்கில் வீலிங் செய்தபடி, கழிவறை சென்று வந்த தமிழ் இளைஞர் மீது மோதுவது போல சென்றள்ளனர்.
கன்னடம் பேச சொல்லி தாக்குதல்
அதிர்ச்சியடைந்த அவர் இளைஞர்களை பார்த்துள்ளார். இதனால் பைக்கில் வந்த இளைஞர்கள் ஆத்திரமடைந்து, 'ஏய் கன்னடம் பேசு' என்று மிரட்டியுள்ளனர். பிறகு அவர்கள் பேருந்தில் ஏறி அவரையும், பேருந்தையும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை டாக்டர் விகாஸ் சோபராஜ் என்பவர் வீடியோவாக எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
பைக்கில் வந்த இளைஞர்கள் தேவையில்லாமல் சீன் போட்டுள்ளனர். 'நீண்ட காலமாக கர்நாடகாவில் இருப்போரிடம் ஏன் கன்னடம் பேசவில்லை என்று கேட்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. சுற்றுலா பேருந்தில் வந்தவர்களை அச்சுறுத்தும் செயலில் ஈடுபடுவது தவறு.' என்று கூறியிருந்தார். இந்த வீடியோ வைரலானது. சுமார் 22 லட்சம் பேர் அந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.
கடைசியில் டிவிஸ்ட்
இந்த வீடியோவில் கமென்ட் செய்த பலரும் இளைஞர்களின் செயலை கண்டித்திருந்தனர். கடைசியில் இது கர்நாடகா காவல்துறையின் கவனத்திற்கும் சென்றது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பெங்களூர் புறநகர் காவல்துறையினர் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை கைது செய்தனர். அவர்களின் வாகனத்தையும் போலீஸ் பறிமுதல் செய்தனர்.
இந்த சம்பவத்தில் துரிதமாக செயல்பட்ட மருத்துவர் விகாஸ் மற்றும் காவல்துறையினருக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள தகவலையும் விகாஸ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த பலரும் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications