மத்திய அமைச்சர் குமாரசாமிக்கு சிக்கல்.. ஐகோர்ட்டை தொடர்ந்து உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது
பெங்களூர்: மத்திய கனரக தொழில்கள் அமைச்சர் குமாரசாமி, கடந்த 2007ல் முதலமைச்சராக இருந்தபோது விதிகளை மீறி நிலம் வாங்கியதாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விசாரணையை ரத்து செய்ய கர்நாடக உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில் குமாரசாமிக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
கர்நாடகாவின் முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி தற்போது மத்திய கனரக தொழில்கள் அமைச்சராக உள்ளார். இவர் 2007ம் ஆண்டு பெங்களூர் தெற்கு தாலுகாவின் உத்தரஹள்ளி ஹோபியில் உள்ள ஹலகேவதேரஹள்ளி கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான இரண்டு நிலங்கள் முதல்வராக இருந்த குமாரசாமியின் உத்தரவு காரணமாக வகைப்பாடு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி 2010ம் ஆண்டு முறைகேடாக தனியாருக்கு ரூ.4.14 கோடிக்கு விற்கப்பட்டது என்று புகார் எழுந்தது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் குமாரசாமி மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.. இதையடுத்து ஊழல் வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மத்திய கனரக தொழில்கள் அமைச்சர் குமாரசாமி மனு தாக்கல் செய்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ராஜேஷ் பிண்டால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, குமாரசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதைக் கருத்தில் கொண்டு, குமாரசாமி மீது வழக்குத் தொடர அனுமதி தேவை என்று வாதிட்டார் மேலும் அதன்படி நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் கூறினார். அனுமதி பெறாமல், விசாரணை மேற்கொள்ளப்படக்கூடாது, மேலும் அவரது மனுவை நிராகரித்ததில் உயர் நீதிமன்றம் தவறு செய்துள்ளது என்றும் குமாரசாமியின் வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால் மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமி மீதான ஊழல் வழக்கை ரத்து செய்ய முடியாது என்று கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உயர்நீதிமன்றமும் நடவடிக்கைகளை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இந்த முறை, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் நான்கு ஆண்டுகள் பழமையான உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மறுத்து விட்டது. இதையடுத்து தற்போது மத்திய அமைச்சர் குமாரசாமி வழக்கை எதிர் கொண்டு தான் ஆக வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications