பலாத்காரம்: பிரஜ்வல் தந்தை கைதி எண் "4567" ரேவண்ணா மீது 2 பெண் அதிகாரிகள் நீதிபதி முன் வாக்குமூலம்!
பெங்களூர்: கர்நாடகா முன்னாள் அமைச்சரும் 3,000 ஆபாச வீடியோக்கள் எடுத்த எம்பி பிரஜ்வலின் தந்தையான ரேவண்ணா மீது 2 அரசு அதிகாரிகள் பலாத்கார புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீதிபதி முன் ஆஜரான 2 பெண் அதிகாரிகளும் ரேவண்ணா மீது பலாத்கார புகார் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவையே அதிர வைத்துக் கொண்டிருக்கிறது 3000 ஆபாச வீடியோக்கள். ஹாசன் தொகுதி எம்பியான பிரஜ்வல் ரேவண்ணா, 300 பெண்களை நாசமாக்கி 3000 ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்திருந்தார். இந்த ஆபாச வீடியோக்கள் ஹாசன் தொகுதியில் 25,000 பேருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது கர்நாடகாவில் பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது.

இந்த வழக்கில் பிரஜ்வல், அவரது தந்தை ரேவண்ணா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிரஜ்வல் வெளிநாடு தப்பிவிட ரேவண்ணா கைது செய்யப்பட்டார். அவரிடம் 4 நாட்கள் விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு தற்போது சிறையில் அடைத்துள்ளது.
பிரஜ்வல் தந்தை ரேவண்ணா தற்போது பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. பரபரன அக்ரஹார சிறையில் கைதி எண் 4567 ரேவண்ணாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.இந்நிலையில் ரேவண்ணா தாக்கல் செய்த ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
இதனிடையே ரேவண்ணா மீது பலாத்கார புகார் கொடுத்த பெண்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ரேவண்ணா தங்களை பலாத்காரம் செய்ததாக 2 அரசு அதிகாரிகள் நேற்று நீதிபதிகள் முன் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே பிரஜ்வலுக்கு எதிராக மொத்தம் 6 பெண்கள் வாக்கு மூலம் கொடுத்துள்ளனர்.
பிரஜ்வல் மற்றும் ரேவண்ணாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்க செல்போன் எண்கள் தரப்பட்டுள்ளன. சிறப்பு புலனாய்வுக் குழுவின் இந்த எண்ணில் ஏராளமான பெண்கள் தொடர்பு கொண்டு புகார் கொடுப்பது எப்படி என விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் ரேவண்ணாவுக்கு எளிதாக ஜாமீன் கிடைத்துவிடாது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications