நான் அவனில்லை பாணியில் இருவரை காதலித்த இளைஞர்.. பூவா? தலையா? போட்டு பஞ்சாயத்து செய்த ஊர் மக்கள்
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் ஒரு கிராமத்தில் முக்கோணக் காதலை முடிவுக்கு கொண்டு வர காசை சுண்டி விட்டு பூவா தலையா போட்டு திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் நடைபெற்றது.
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தின் சக்லேஷ்பூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 27 வயது இளைஞர். இவருக்கும் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக காதல் இருந்து வந்தது.
இந்த நிலையில் அண்மையில் வேறு ஒரு பெண் ஒருவருடன் அந்த இளைஞர் பழகுவதை உறவினர் ஒருவர் பார்த்துவிட்டு அவரது தந்தையிடம் கூறிவிட்டார்.

விசாரணை
தந்தையும் அந்த இளைஞரை அழைத்து விசாரித்துள்ளார். அப்போது, தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவரையே திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் அதற்கு அவர் தந்தை ஒப்புக் கொள்ளவில்லை. வேறு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்தார்.

இரு பெண்கள்
திருமண ஏற்பாடுகள் குறித்து தகவல் இந்த இரு பெண்களுக்கும் கிடைத்துள்ளது. இதையடுத்து முதலில் ஒரு பெண் அந்த பையனின் வீட்டுக்கு சென்று தனக்கும் அந்த பையனுக்கும் இடையே உள்ள காதலை கூறினார். அப்போது அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி, இன்னொரு பெண்ணும் அந்த இளைஞரை காதலிப்பதாகவும் தன்னுடன் அவரை சேர்த்து வைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

நான் அவனில்லை
அப்போதுதான் அந்த இளைஞர் நான் அவனில்லை படத்தில் வரும் ஹீரோ என தெரியவந்தது. ஒரே நேரத்தில் இரு பெண்களை காதலித்த விஷயமும் வெளியே வந்தது. இதையடுத்து ஊர் பஞ்சாயத்திடம் பேச்சுவார்த்தை நடத்த சென்றனர். அப்போது யாரை திருமணம் செய்துக் கொள்கிறாய் என ஊர் பஞ்சாயத்தார் கேட்டனர். அப்போது இரு பெண்களும் தங்கள் தரப்பு நியாயங்களையும் காதலையும் தெரிவித்தனர்.

வேதனை
ஆனால் அந்த இளைஞர் பேசாமல் முழித்து கொண்டிருந்தார். இதனால் வேதனையடைந்த ஒரு காதலி விஷத்தை குடித்துவிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். இதையடுத்து அந்த பெண்ணை தடுத்து நிறுத்திய ஊர் மக்கள், மீண்டும் பஞ்சாயத்தை கூட்டினர். அப்போதும் அவரிடம் அந்த கேள்வி வைக்கப்பட்டது.

வழக்கறிஞரின் முன்னிலை
அதனால் மூன்று வீட்டார் மற்றும் வழக்கறிஞரின் முன்னிலையில் பஞ்சாயத்தின் முடிவுக்கு கட்டுப்படுவதாகவும் இது குறித்து போலீஸ் ஸ்டேஷனுக்கோ நீதிமன்றத்திற்கோ ஊடகங்களுக்கோ செல்ல கூடாது என கேட்டு கையெழுத்து பெற்றுக் கொண்டு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

பிரச்சினையைத் தீர்க்க
இந்த பிரச்சினையை தீர்க்க என்ன வழி என யோசித்திருக்கிறார்கள். சரி காசை சுண்டிவிட்டு அதில் பூவா தலையா போட்டு யாரை திருமணம் செய்து வைப்பது என்பது குறித்து முடிவெடுக்கலாம் என சொல்லியுள்ளார்கள். இதற்கு 3 வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து பூவா தலையா போட்டதில் அவர் முதலில் காதலித்த காதலியை கைப்பிடிப்பது என வந்தது.

முதல் காதலியுடன் திருமணம்
இதையடுத்து அந்த இளைஞருக்கும் முதலில் காதலித்த பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த சம்பவத்தால் ஏமாற்றமடைந்த இரண்டாவது காதலி, அந்த திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்ததுடன் தன்னை ஏமாற்றிய இளைஞரை பளார் என அறைந்துள்ளார். பின்னர் பாருடா உன்னை விட அருமையான வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து நான் வாழ்ந்து காட்டுகிறேன் என சொடுக்கு போட்டு சவால் விட்டு சென்றுள்ளார். இந்த வினோதமான தீர்ப்பு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் பெரிய பிரச்சினையை வெறும் பூவா தலையா போட்டு தீர்த்துள்ளனரே என பாராட்டுகளும் குவிகின்றன.

சினிமாவை காட்டிலும் சுவாரஸ்யம்
சினிமாவை காட்டிலும் இந்த பஞ்சாயத்தில் சுவாரஸ்யமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இருவரை காதலித்ததால் அந்த இளைஞருக்கு பூ விழுந்தாலும் சரி தலை விழுந்தாலும் பிரச்சினை இல்லை. கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற ரேஞ்சில் எந்த பதிலையும் சொல்லாமல் இருந்திருக்கிறார். ஆனால் இந்த இரு பெண்களுக்குத்தான் இந்த பூவா தலையா என்பது அக்னி பரீட்சையாக இருந்தது. ஒருவர் தேர்வு செய்யப்பட்டால் இன்னொருவருக்கு காதல் வாழ்க்கை பறி போகும் நிலை இருந்தது. ஆனால் இந்த விஷயத்தில் இரண்டாவதாக அவர் காதலித்த பெண்ணை பாராட்டியே ஆக வேண்டும். தான் டாஸில் தோல்வி அடைந்தாலும் முதல் காதலியை வாழ்த்திவிட்டு அந்த இளைஞரையும் பளார் விட்டு தைரியமாக நான் உன்னைவிட சிறப்பாக வாழ்வேன் என சொன்ன தைரியமும் தன்னம்பிக்கையும் அனைவரையும் கவர்ந்துள்ளது. இன்று காதல் தோல்வி ஏற்பட்டால் ஆணும் சரி பெண்ணும் சரி தவறான முடிவை எடுக்கிறார்கள். ஒன்று தற்கொலை செய்து கொள்கிறார்கள், இல்லாவிட்டால் எதிராளியை கொலை செய்வது ஆசிட் அடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகிறார்கள். காதல் என்பது பழி வாங்கும் செயல் அல்ல. எங்கிருந்தாலும் வாழ்க என வாழ்த்தும் செயல் என்பதை அந்த பெண் நிரூபித்துவிட்டார்.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
பிராமணர்களுக்கு வாய்ப்பில்லை.. கர்நாடகா புதிய அமைச்சர்களில் யார் யார் எந்த ஜாதி? வென்ற சித்தராமையா -
கார்கே மகன் - சித்தராமையாவின் மகனுக்கு இடம்.. கர்நாடகாவின் புதிய அமைச்சர்கள் யார் யார்? முழு லிஸ்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்












Click it and Unblock the Notifications