சசிகலா சுய நினைவுடன் நன்றாக இருக்கிறார்; சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தருகிறார் -விக்டோரியா மருத்துவமனை
பெங்களூரு: சசிகலா சுய நினைவுடன் நன்றாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
நேற்று முன் தினம் மாலை சுவாசப் பிரச்சனை காரணமாக பெளரிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலா உயர் சிகிச்சைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு நேற்று பிற்பகல் மாற்றப்பட்டார்.

இதையடுத்து அவருக்கு உடனடியாக சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு நுரையீரல் தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த தொற்று மேலும் பரவாமல் இருக்கும் வகையில் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை தரப்படும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
இந்நிலையில் ஆர்.டி. பிசிஆர் சோதனை முடிவின் அடிப்படையில் சசிகலாவுக்கு கொரோனா இருப்பது நேற்றிரவு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து கொரோனா வார்டுக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சைகள் தொடர்ந்து வருகின்றன.
சசிகலாவுக்கு கொரோனா என்ற செய்தி வெளியானது முதல் அவரது ஒட்டுமொத்த குடும்ப உறவுகளும் பெங்களூரில் மையம் கொண்டுள்ளன. மறைந்த ம.நடராஜனின் சகோதரர்கள் பழனிவேல், ராமச்சந்திரன் தொடங்கி திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் வரை பெங்களூரில் முகாமிட்டுள்ளார்கள்.
இது ஒரு புறமிருக்க அமமுகவின் முன்னணி நிர்வாகிகள் அனைவரும் பெங்களூருவில் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். அங்கு டிடிவி தினகரனை சந்தித்து சசிகலா உடல்நிலை பற்றி விசாரித்த வண்ணம் உள்ளனர்.

இதனால் சசிகலா உடல்நிலை விவகாரத்தில் மிகுந்த வெளிப்படைத்தன்மையோடு நடந்து கொள்ளும் விதமாக அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வரும் விக்டோரியா மருத்துவமனை தரப்பில் இருந்து அவ்வப்போது அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
அதன்படி இன்று மாலை 6 மணிக்கு வெளியான அறிக்கையில், சசிகலா சுய நினைவுடன் நன்றாக இருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து 10 மணிக்கு வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில், சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், சிகிச்சைக்கு தேவையான ஒத்துழைப்பை தருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடர்ந்து ஐ.சி.யூ.வில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், கொரோனாவுக்கு வழக்கமாக என்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படுமோ அது அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன்;
Pulse: 68/min
BP : 128/58mm Hg
Respiratory rate: 20 normal
Sp O2: 97% with 5L NRBM என்ற சசிகலாவின் உடல்நிலை குறித்த தற்போதைய நிலவரத்தை விக்டோரியா மருத்துவமனை தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications