சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதி... தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
பெங்களூரு: சசிகலாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். சோதனையில் கொரோனா பாசிட்டிவ் என தெரியவந்துள்ளது.
Recommended Video

இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து உடனடியாக கொரோனா வார்டுக்கு சசிகலா மாற்றப்பட்டார். அங்கு தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகள் தொடர்கின்றன.

நேற்று மாலை வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று மட்டும் இருப்பதாக விக்டோரியா மருத்துவமனை தெரிவித்திருந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று உறுதி என்ற அறிவிப்பு சோதனை முடிவின் அடிப்படையில் நேற்றிரவு வெளியிடப்பட்டது.
63 வயதாகும் சசிகலாவுக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் இருக்கின்றன. இதற்காக அவர் வழக்கமாக சாப்பிடும் மருந்துகளை உட்கொண்டு வந்த நேரத்தில், திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்ட பெங்களூர் பெளரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆனால் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கக் கூடிய வகையில் போதிய வசதிகள் இல்லாததால் இன்று பிற்பகல் விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சசிகலா. அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நுரையீரல் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தொற்றானது மேலும், பரவாத வகையில் தீவிர சிகிச்சை பிரிவிலேயே அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் தொடரும் என விக்டோரியா மருத்துவமனை தெரிவித்திருந்தது. மேலும், சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தொடர்ந்து மருத்துவர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் அறிவித்திருந்தது.
இதேபோல் சசிகலாவுக்கு சர்க்கரை அளவு மட்டும் சற்று அதிகம் இருப்பதாகவும் அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே சசிகலாவுக்கு ஆர்.டி-பிசிஆர் மூலம் மீண்டும் கொரோனா சோதனை நடத்தப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி என்ற செய்தி வெளியாகியுள்ளது.
இன்னும் 5 நாட்களில் விடுதலையாகவுள்ள நிலையில் சசிகலாவின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு அமமுகவினரை கலங்க வைத்துள்ளது. சசிகலாவின் உடலநலத்திற்காக அவர்கள் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications